”நான் ரெண்டு பேர லவ் பண்றேங்க..” : மனைவி முன்னால் உண்மையை உடைத்த பரிதாபங்கள் சுதாகர்..
இவர்களில் யாரை அதிகம் பிடிக்கும் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சுதாகர், ஒருவர் இரண்டு பேரை காதலிக்கக்கூடாதா? நான் இரண்டு பேரையும் லவ் பண்றேன் என்று கூறியுள்ளார்.
பிரபல தமிழ் யூ ட்யூப் சேனல்களுள் ஒன்று பரிதாபங்கள். இந்த சேனல் மூலம் பிரபலமானவர்கள், கோபி மற்றும் சுதாகர் இவர்களின் காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதில் சுதாகர் என்பவருக்கு கடந்த மார்ச் மதம் 13-ஆம் நாள் திருமணம் நடந்தது. தனது ஐந்து வருட காதலி லட்சுமி குமாரி என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் மணமுடித்தார் பரிதாபங்கள் சுதாகர். திருமணத்திற்கு பின்பு தனது மனைவியுடன் தனியார் யூ ட்யூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டார். இந்த நேர்காணலின் பொது பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவற்றின் சிறு பகுதி இதோ :
சுதாகரின் காதல் கதை :
இன்ஜினியரிங் பட்டதாரியான சுதாகர் 2016-ஆம் ஆண்டு பிழைப்புக்ககாக சென்னை வந்துள்ளார். பல இன்னல்களை சந்தித்து இன்று ஊடகத்துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.சென்னை வந்த புதிதில் மூன்று வேலையும் அம்மா உணவகத்தில் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்திருந்தாராம். தன் காதலியும் மனைவியுமான லக்ஷ்மியை தெரிந்த நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் சந்தித்துள்ளார். 5 வருட ரகசிய காதலுக்கு பிறகு பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கரம் பிடித்துள்ளார்.
கட்டட வடிவமைப்பாளராக பணிபுரியும் லக்ஷ்மி தன பெற்றோரிடம் காதலைக்கூறி இரண்டு வருட போராட்டத்திற்கு பின் சுதாகரை மணந்துள்ளார். சுதாகர் லக்ஷ்மியின் வீட்டிற்கு தங்கள் காதலை தெரிவிக்க சென்றிருந்தபோது அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் வைத்து பேசி அனுப்பி உள்ளார் லக்ஷ்மியின் தந்தை. இரண்டு வருடங்களுக்கு பின் லக்ஷ்மியின் பெற்றோர் சம்மதிக்க கோலாகலமாக நடந்து முடிந்தது இவர்களது திருமணம்.
இரண்டு பேரையும் காதலிக்கிறேன் !
சுதாகரின் திருமணத்திருக்கு முன் இரட்டையர்கள் போல் இருந்த கோபியும் சுதாகரும், தற்போது தொலைபேசியில் பேச கூட தயங்குகிறார்ககளாம். கோபியை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறிய சுதாகரிடம், கோபி லக்ஷ்மி இவர்களில் யாரை அதிகம் பிடிக்கும் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சுதாகர், ஒருவர் இரண்டு பேரை காதலிக்க கூடாதா? நான் இரண்டு பேரையும் லவ் பண்றேன் என்று கூறியுள்ளார்.
மேலும் லக்ஷ்மியின் பிறந்தநாள் அன்று கோபியின் திருமணம் நடைபெற இருந்தால் நீங்கள் எதற்கு செல்வீர்கள் என கேட்க லக்ஷ்மியை அழைத்துக்கொண்டு கல்யாணத்திற்கு போக வேண்டியதுதான் என மிகவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.மேலும் பத்தாம் வகுப்பில் ஏற்பட்ட தனது முதல் காதல் அனுபவத்தை சுதாகர் பகிர்ந்துள்ளார். இது தன் மனைவிக்கு முன்னதாகவே தெரியும் என்றும் கூறியுள்ளார்.