கொடி பட தனுஷ், த்ரிஷாவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள்.. வைரலாகும் வீடியோ..
சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்துவரும் நடிகை சுஜிதா,கதைகேளு, கதைகேளு என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவ்வப்போது வாழ்க்கைத் தேவையான பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துவருவார்
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவ்வாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், கொடி படத்தில் தனுஷ் போடும் மூவ்மென்ட் காட்சிகள் போன்று எடுத்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இன்றைக்கு டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவற்றின் மூலம் தங்களது திறமையை மக்கள் தினந்தோறும் வெளிப்படுத்திவருகின்றனர். நடனம், நடிப்பு, காமெடி என அனைத்திலும் சினிமா பிரபலங்களை விட மக்கள் சிறப்பாக செய்துவருகின்றனர். இவர்கள் மட்டுமில்லாது சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களும் சோசியல் மிடியாவில் பல வீடியோக்களைப்பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இதோடு மட்டுமின்றி பல சின்னத்திரை சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் யூடியூப் சேனல்களை ஆரம்பித்து தன்னுடைய வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றர் இதோடு படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சுவாரஸ்சியமான விஷயங்களைப் பதிவிட்டும் வருகின்றனர். இந்த வரிசையில் இதில் முதன்மையானவர்களாகத் திகழ்கின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள். இச்சீரியலில் வரும் தனம், மீனா, கண்ணன், ஐஸ்வர்யா என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் உச்சிக்கு சென்ற சுஜிதா மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் கொடி படத்தில் பாடலுக்கு மூவ்மெண்ட் கொடுப்பது போன்ற வீடியோ எடுத்துள்ளனர். “கொடி கொடி என்று தொடங்கும் அந்த பாடலுக்கு இருவரும் கச்சதமாக பொருந்தியிருக்கும் நிலையில், த்ரிஷா கேரக்டரில் சுஜிதாவும், தனுஷ் கேரக்டரில் சரவணன் விக்ரமும்“ இணைந்து நடித்தியுள்ளார். வயல் வெளியில் இருவரும் மேற்கொள்ளும் காட்சிகள் தற்போது இன்ஸ்டாவில் பதிவாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் குவித்துவருகின்றனர்.
View this post on Instagram
மேலும் இன்ஸ்டாவில் வீடியோவைப்பார்த்த ரசிகர்கள் பலரும் கொடி பட சீனுக்கு சரியானப் பொருத்தம் என்று கூறிவருகின்றனர். மற்றொரு ரசிகர் ஒருவர், ஏன் இந்த வேலை உங்களுக்கு என கலாய்த்துவருகின்றனர்.
சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்துவரும் நடிகை சுஜிதா,கதைகேளு, கதைகேளு என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவ்வப்போது வாழ்க்கைத் தேவையான பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து வருவார். இதோடு மட்டுமின்றி தனது குடும்பத்துடன் அவுட்டிங் செல்வது, சீரியலில் சக நடிகர்களுடன் ரீல்ஸ் செய்து வெளியிடுவது என தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சுஜிதா அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், தன்னுடைய கடைசி கொழுந்தன் கண்ணன் என்ற சரவணன் விக்ரமும் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவானது ரசிர்களை அதிகளவில் கவர்ந்ததோடு இணையத்தில் வைரலாகியும் வருவது குறிப்பிடத்தக்கது.