மேலும் அறிய
Advertisement
OTT Release Movies: இந்த வாரம் செம ட்ரீட் கொடுக்கும் ஓடிடி.. லியோ, சித்தா படங்களின் ரிலீஸ் தேதி..!
ஓடிடியில் விஜய் நடித்த லியோ, சித்தார்த்தின் நடிப்பில் வெளிவந்த சித்தா உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
OTT Release Movies: இந்த வாரம் ஓடிடியில் விஜய் நடித்த லியோ, சித்தார்த்தின் நடிப்பில் வெளிவந்த சித்தா உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
திரையரங்குகளில் போட்டி போட்டு கொண்டு புதுப்படங்கள் ரிலீசாவது போலவே ஓடிடி தளங்களில் பிரபல நடிகர்கள் முதல் அறிமுக நடிகர் வரை அனைவரின் படங்களும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. எவ்வளவு பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும் திரைக்கு வந்த 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாவதால், ரசிகர்கள் வீட்டில் இருந்தபடி அந்த படங்களை பார்த்து ரசித்து விடுகின்றனர். இதனால் அமேசான் பிரைம், டிஸ்னி ஹாஸ்ட் ஸ்டார், ஜியோ சினிமா, ஜீ5, ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள் போட்டி போட்டு கொண்டு திரைப்படங்களை வெளியிடுகின்றன. அந்த வகையில் இந்த வாரத்திற்கான ஓடிடி ரிலீஸ் படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளன.
லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீசானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் பாக்ஸ் ஆபிசில் கலெஷனை வாரி குவித்ததாக படக்குழு கூறி வருகின்றன. அண்மையில் லியோ படத்தின் வெற்றி விழா நடத்தி அனைவருக்கும் படக்குழுவினர் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டனர். விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்த லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் லியோ படம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் என கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூவ தகவலை படக்குழு வெளியிடவில்லை.
சித்தா: சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. அருண்குமார் இயக்கியுள்ள சித்தா படத்தில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் சீண்டலையும், அவர்களின் உளவியல் பிரச்சனையையும் சாட்டையடியாய் கூறும் சித்தா படம் ரசிகர்களையும் தாண்டி திரை பிரபலங்களின் வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் சித்தா படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் 17ம் தேதி ரிலீசாகும் என கூறப்படுகிறது.
அபூர்வா: துப்பறிவாளன் கதையை மையப்படுத்தி எடுக்கபப்ட்ட அர்பூவா படம் நல்ல வரவேற்பை பெற்றது. துப்பறிவாளனை சுற்றி நடக்கும் சூழ்த்தி, ரகசியம் என சுவாரசியத்துக்கு பஞ்சமில்லாத அபூர்வா படத்தில் அபிஷேக் பானர்ஜி மற்றும் ராஜ்பால் யாதவ் நடித்துள்ளனர். இந்த படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கண்ணூர் ஸ்குவாட்: மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வந்தது. 2013ம் ஆண்டு நடந்த கொலையும், அதன் விசாரணை பின்னணையும் கதையாக கொண்டு எடுக்கப்பட்ட கண்ணூர் ஸ்குவாட் படம் விமர்சனத்தில் வரவேர்பை பெற்றது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து விஜயராகவன், கிஷோர், டோனி டேவிட், ஷபரீஷ் வர்மா என பலர் நடித்துள்ளன. எதிர்பார்த்த வசூலை தந்த கண்ணூர் ஸ்குவாட் படம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நவம்பர் 17ம் தேதி ரிலீசாக உள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion