அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் வசூல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ரூ.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படம் இப்படம் 3 நாட்களில் 50 கோடி வசூலித்தது.
இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கோலிவுட்டின் அடுத்த வளர்ந்து வரும் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் கேரளா , ஆந்திராவிலும் அவருக்கு பெரியளவில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
டிராகன் படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி அடையும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்பே கணித்திருக்கிறது. அதனால் இந்த படத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் தானே இந்த படத்தை தமிழ்நாட்டில் விநியோகமும் செய்தது
டிராகன் படத்தை 15 முதல் 20 கோடி கொடுத்து வாங்க வரை விநியோகஸ்தர்கள் முன்வந்தும் படத்தை தானே வெளியிட ஏ.ஜி.எஸ் முடிவு செய்தது.
டிராகன் படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டிராகன் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.