மேலும் அறிய

Oppenheimer: கிராபிக்ஸ் காட்சிகளே இல்லாமல் வெளியாகியுள்ள “ஓப்பன்ஹெய்மர்” டிரெய்லர்.. அத்தனையும் புதுசு!..

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தின் முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அனைத்து வகையிலும் ஒரு தரமான திரைப்படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்கு, உலக திரைப்பட கலைஞர்களுக்கு ஒரு ஆகச்சிறந்த முன்னோடியாக விளங்குபவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் நோலன்.  நேர்த்தியான மேக்கிங் மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் அவருக்கான அடையாளமாக உருவாகியுள்ளது. முழுமையான கமர்சியல் கதாபாத்திரமான பேட் மேனை மையப்படுத்தியே அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான கதைக்களத்தை உருவாக்கி பெரும் வெற்றி கண்டவர் நோலன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு வெளியான டெனட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் நோலன்.

ஓப்பன் ஹெய்மர்:

தொடர்ந்து வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திற்காக மட்டுமே படங்களை இயக்கி வந்த நோலன், அதிலிருந்து வெளியேறி முதன்முறையாக வேறு ஒரு நிறுவனத்திற்காக படத்தை இயக்கியுள்ளார். அதன்படி, ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை சின்காப்பி இன்க் மற்றும் அட்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில் நோலன், அவரின் மனைவி எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.  யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது. புலிட்சர் விருது பெற்ற American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தை தழுவி இப்படம் உருவாகி வருகிறது.

முக்கிய கதாபாத்திரங்கள்:

அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில்,  பீக்கி பிளைண்டர்ஸ் சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த சில்லியன் மார்பி நடித்துள்ளார். நோலன் உடன் சேர்ந்து அவர் பணியாற்றுவது இது ஆறாவது முறையாக இருந்தாலும், சில்லியன் மார்பி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதன்முறையாகும்.  அதோடு, அயர்மேன் கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ராபர்ட் டவுனி ஜூனியர், தி பாய்ஸ்  சீரிஸ் மூலம் பிரபலமான ஜாக் குவைட் ஆகியோருடன்,  மாட் டீமன் ம்ற்றும் எமிலி பிளண்ட் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

ஒப்பன் ஹெய்மரின் வியக்கத்தக்க தகவல்கள்:

இயற்பியல் விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் அவரின் குழுவுடன் சேர்ந்து முதல் அணுகுண்டை மான்ஹாட்டன் ப்ராஜெக்ட் மூலம் வெடிக்கச் செய்து ஆய்வு செய்தனர். அந்த அணுகுண்டு சோதனையை மையாக வைத்து அதை அரசியல் கண்ணோட்டத்தில் படமாக்கியுள்ளார் கிறிஸ்டோபர் நோலன்.  அந்த சோதனையின்போது, பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அணுகுண்டை ஆராய்ச்சியாளர்கள் வெறும் கைகளால் அசெம்பிள் செய்தது குறிப்பிடத்தகக்து. அந்த நிகழ்வுகள் அனைத்தையும் தத்ரூபமாக படமாக்கியுள்ளார் நோலன். டிரெய்லரில் உள்ள பல காட்சிகளில் பிரமாண்டமான தீப்பிழம்பை காண முடிகிறது. அது எதுவுமே கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, அணுகுண்டு வெடிப்பது தொடர்பான சோதனையையும் கிராபிக்ஸ் உதவியின்றி மிகவும் தத்ரூபமாகவும், உண்மையான காட்சிகளாகவும் உருவாக்கியுள்ளார் நோலன்.

குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் ஓப்பன்ஹெய்மர்: 

வழக்கமான நோலன் படங்கள் பெரும் பொருட்செலவில் உருவாகும். ஆனால், நீண்ட காலங்களுக்குப் பிறகு வெறும் 100 மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில், ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறிய நோலனுக்கு, முழு சுதந்திரம் கொடுத்து அவர் விருப்பப்படியே படத்தை உருவாக்க யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதுவரை தான் பணியாற்றியதிலேயே மிகவும் கடினாமன படம் என “ஓப்பன் ஹெய்மர்” திரைப்படத்தை நோலன் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், அந்த திரைப்படம் எந்த அளவிற்கு சிறந்ததாக இருக்கும் என, ரசிகர்கள் இடையே எதிர்பார்பு அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை 21ம் தேதி உலகம் முழுவதும் "ஓப்பன்ஹெய்மர்" திரைப்படம் வெளியாகவுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Embed widget