Vikram Movie Watch Video : ஷூட்டிங் வீடியோ! ரிலீஸ் தேதி!! மரண மாஸ் அப்டேட் கொடுத்த விக்ரம் படக்குழு!
படத்தில் ஏராளமான நடிகர்கள் களமிறக்கப்பட்டாலும் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோரின் காம்போதான் ஹைலைட்.
2022ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உள்ளது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். நடிப்பு ஜாம்பவான்கள் என கொண்டாடப்படும் , மும்மூர்த்திகளை ஒரே திரையில் காட்டும் முயற்சியை கையில் எடுத்தார் லோகேஷ். படத்தில் ஏராளமான நடிகர்கள் களமிறக்கப்பட்டாலும் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோரின் காம்போதான் ஹைலைட்.
விக்ரம் படத்தை கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் நிலையில் இன்று மாஸ் அப்டேட்டைக் கொடுத்துள்ளார் படத்தின் இயக்குநர் லோகேஷ். விக்ரம் உருவான விதம் தொடர்பான மாஸ் வீடியோவை வெளியிட்ட இயக்குநர் ஜூன் 3ம் தேதி விக்ரம் படம் தியேட்டர்களில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
பட ரிலீஸ் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல், நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Nandri Aandavarey!🙏🏻
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 14, 2022
See you soon in Cinemas worldwide from June 3rd, 2022!#VikramFromJune3 #Ulaganayagan#KamalHaasan #VikramMakingGlimpse #Vikram https://t.co/NLcNSmfVVZ https://t.co/bDBnp2bAyn
முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்த கமல்ஹாசன், ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் இயக்குநர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டார். அவருக்கு பதில் அளித்த லோகேஷ், இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே எனக் குறிப்பிட்டார்.
இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே🙏🏻🙏🏻🙏🏻 https://t.co/KtgHaoiEEj
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 13, 2022
.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்