மேலும் அறிய

Trisha: பொன்னியின் செல்வன் மட்டுமல்ல...‘குந்தவை’ த்ரிஷாவுக்கு இதே நாளில் நடந்த மறக்க முடியாத விஷயம்.....என்ன தெரியுமா?

குந்தவையாக வரும் த்ரிஷாவின் நடிப்பு மட்டுமல்ல அவரின் தோற்றமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்கள் த்ரிஷாவின் உடை, அவரின் மேனரிசங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

பொன்னியின் செல்வன் படம் வெளியாகியுள்ள இதே நாளில் நடிகை த்ரிஷாவுக்கு, அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் இன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா,நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், ஆழ்வார்கடியன் நம்பியாக ஜெயராம், பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.  இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Trish (@trishakrishnan)

இதில் குந்தவையாக வரும் த்ரிஷாவின் நடிப்பு மட்டுமல்ல அவரின் தோற்றமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்கள் த்ரிஷாவின் உடை, அவரின் மேனரிசங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பலரும் அவரை இளைய பிராட்டி குந்தவையாகவே கொண்டாட தொடங்கினர். இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. மேலும் தமிழ் சினிமாவின் 50 வருட கனவான பொன்னியின் செல்வன் நாவல் படமாக ஆகியுள்ளதன் மூலம் த்ரிஷாவுக்கு இந்நாள் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. 

இதுமட்டுமல்லாமல் 23 ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷா வாழ்க்கையில் இந்நாள் மறக்க முடியாத நாளாக இருந்திருக்கிறது. அதாவது 1999 ஆம் ஆண்டு இதே நாளில் தான் த்ரிஷா மிஸ் சென்னை அழகிப்போட்டியில் முதலிடம் பெற்று அசத்தினார். ஜோடி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான த்ரிஷா,லேசா லேசா படத்தின் மூலம் நடிகையாக ஜொலிக்க தொடங்கினர். தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிலம்பரசன், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இன்றளவும் முன்னணி நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget