மேலும் அறிய

திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்

சேலத்தில் 6 ஆண்டுகளாக பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்கப்படாமல் இருப்பது குறித்து தவெக தலித் அமைச்சர்களை மீது பா ரஞ்சித் விமர்சனம் வைத்துள்ளார்

தவெக ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்தும் தலித் அமைச்சர்கள் ஏன் எந்த ஒரு தலித் பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை இயக்குநர் பா ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். அம்பேத்கரை கொள்கை தலைவராக கொண்டுள்ள தவெக சேலத்தில் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டாமல் இருந்து வருவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும் தவெக அமைச்சரவையில் உள்ள 7 தலித் அமைச்சர்கள் எங்களுடைய பிரதிநிதிகள் இல்லை என்றும் அவர் பகிரங்மாக அறிவித்துள்ளார். 

டெல்லியில் சிஜேபி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து சென்னை எழும்பூரில் பா ரஞ்சித் தலைமையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் , அமீர் , நடிகை ஆன்ட்ரியா ஆகியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு  நீட் தேர்வு எதிர்ப்பு குறித்தும் சிஜேபி மாணவர்கள் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித் தவெக அமைச்சரவையில் உள்ள 7 பட்டியலின அமைச்சர்கள் குறித்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பா ரஞ்சித்

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராடிய மாணவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டது குறித்து பேசிய பா ரஞ்சித் "பாரதிய ஜனதா கட்சி பாசிச கட்சி. அதனால் அது போராட்டத்தை ஒடுக்கதான் செய்யும். ஆனால் தமிழக அரசு ஏன் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குகிறது. மாணவர்களை அடிப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? பேட்ச் இல்லாமல் அடிப்பதற்கு கோழைகளா நீங்கள்?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் 

தவெகவில் மொத்தம் 8 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றது அனைவரும் பரவலாக பேசப்பட்டது. இதுகுறித்து பா ரஞ்சித் பேசுகையில் "முதலில் தவெக அமைச்சரவையில் இருக்கும் 8 பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இன்று வரை அமைச்சர் வன்னியரசை தவிர மீதி எந்த அமைச்சராவது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா?  முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே எங்களுக்கு தெரியாது. அவர் எழும்பூரில் நின்றபோது தான் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது.  ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு அவர் குரல் கொடுத்திருக்கிறாரா? இப்படியான ஒருவர் அமைச்சர் ஆனால் என்ன ஆகலனா என்ன. அவரை நீங்கள் அமைச்சர் ஆக்கிக்கொள்ளுங்கள். நல்ல விஷயம். அதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. 

அமைச்சர் வன்னியரசுக்கு பாராட்டு

வன்னியரசு தோழர் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் சில விஷயங்களை செய்கிறார். அவருக்கும் எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் அவரது செய்ல்பாடுகளை பார்த்து நான் வியந்தேன். இந்த மேடையில் அவருக்கு எங்களுடைய பாராட்டுக்களை தெரிவிக்க நான் கடமைபட்டிருக்கிறேன்.

சேலத்தில் திறக்கப்படாத அம்பேத்கர் சிலை

ஆனால் தவெகவில் இருக்கக் கூடிய மீதி 7 தலித் அமைச்சர்கள் என்ன செய்தீர்கள். சேலம் மாவட்டத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அம்பேத்கர் சிலையை திறக்க அனுமதி வழங்கி 6 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அதை திறக்க முடியவில்லை. அந்த சிலை திறப்பை அரசு சார்பாக விழா ஒருங்கிணைத்து திறப்பு விழா நடத்த வேண்டும்.  கால்மேல் கால்போட்டபடி அம்பேத்கரின் சிலை இருந்த ஒரே காரணத்திருக்காக, அந்த சிலையை திறக்க விடாமல் செய்கிறார்கள்.

அம்பேத்கர் உங்களுடைய கொள்கைத் தலைவர்தானே? உங்கள் கொள்கைத் தலைவரை மக்கள் இன்னும் சாதி அடிப்படையில் பார்க்கிறார்கள். அதைப் பார்க்கும்போது உங்களுக்கு கோபம் வர வேண்டாமா? அப்படியிருக்க, நீங்களே நேரில் சென்று அந்தச் சிலையைத் திறந்து வைக்கலாமே?"

உங்களுக்கு கோபமே வரவில்லையா? அமைச்சரவையில் இருக்கும் அந்த ஏழு தலித் அமைச்சர்களுக்காவது கோபம் வந்ததா? அவர்களுக்குக்கூட கோபம் வரவில்லை என்றால், அவர்கள் எங்களின் பிரதிநிதிகள் அல்ல. எங்கள் சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பவர்களும் அல்ல." சாதி ரீதியான மத ரீதியான சமரசங்களொடு தான் நீங்கள் ஆட்சி நடத்துவீர்கள் என்று எங்களுக்கு சொல்ல வருகிறீர்களா என்பது தான் எங்களுடைய கேள்வி." என பா ரஞ்சித் பேசினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget