Sushmita Sen Adopts Son? | மகனைத் தத்தெடுத்தாரா சுஷ்மிதா சென்? நடந்தது என்ன?
ஒரு சில ரசிகர்கள்,’இந்தப் பிள்ளை தங்களது வாழ்வில் இந்த தேவதையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்’ என கமெண்ட் செய்திருந்தனர்.
அண்மையில் முன்னாள் பிரபஞ்ச அழகியும் பாலிவுட் நடிகருமான சுஷ்மிதா சென் ஒரு குட்டிப் பிள்ளையுடன் போஸ் கொடுத்த போட்டோ சோஷியல் மீடியாக்களில் வைரலானது. இந்த போட்டோவை வெளியிட்ட புகைப்படக்காரரும் ‘சுஷ்மிதா சென்னின் மகன்’ என தனது புகைப்படத்தில் கேப்ஷன் இட்டிருந்தார். இதனால் சுஷ்மிதா சென் மீண்டும் ஒரு பிள்ளையை தத்தெடுத்தாரா என அவரது ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஒரு சில ரசிகர்கள்,’இந்தப் பிள்ளை தங்களது வாழ்வில் இந்த தேவதையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்’ என கமெண்ட் செய்திருந்தனர். சிலர் ‘ஹேட்ஸ் ஆஃப். இவர் போன்ற இதயம் வேறும் யாருக்கும் இருக்காது என கமெண்ட் செய்திருந்தனர்’
View this post on Instagram
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளித்திருந்த சுஷ்மிதா சென், அந்தப் பிள்ளை தனது நண்பரின் மகன் என்றும் தனது மகள் அலிஷா அந்தப் பிள்ளைக்காக ஒன்பது மாதங்கள் பிரார்த்தனை செய்ததால் தான் அவனை சொந்த மகன் போலக் கருதுவதாகவும், இருந்தாலும் தனது குடும்பத்தை இந்தப் புகைப்படம் மூலம் ஆசீர்வதித்த புகைப்படக்காரருக்கு நன்றி என்றும் அவர் விளக்கியிருந்தார்.
View this post on Instagram
சுஷ்மிதா சென்னுக்கு ரெனே மற்றும் அலிஷா என இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். இருவருமே சுஷ்மிதாவால் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





















