Priyanka Chopra : உனக்கு 7 எனக்கு 17... 'உலக அழகி' பட்டம் வென்றதை டிவியில் பார்த்த நிக்... பிரியங்கா சோப்ரா மாமியார் சொன்ன கதை என்ன?
2000 ஆம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா அழகி பட்டம் வென்ற போது அதை டிவியில் பார்த்துள்ளார் நிக் ஜோனாஸ்.
உலகளவில் மிகவும் பிரபலமான ஜோடிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ். இந்த காதல் ஜோடி 2018ம் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் 2016ம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. திருமணமாகிய இந்த நான்கு ஆண்டுகளில் இந்த அவர்கள் இருவரிடையே இருக்கும் அன்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த அன்பான தம்பதியினருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தந்து மாமியார் பகிர்ந்த ஒரு கதையை நினைவு கூர்ந்தார் பிரியங்கா சோப்ரா.
பிரியங்கா சோப்ரா சமீபத்தில் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட போது பிரியங்காவின் மாமியார் டெனிஸ் தன்னிடம் பகிர்ந்து ஒரு கதையை விவரித்தார் பிரியங்கா. " எனது மாமியார் அந்த கதையை பற்றி சொல்லும் போது எனக்கு தெரியாதே என தோன்றியது. எனக்கு 18 வயது இருக்கும் போது நான் உலக அழகி போட்டியில் வெற்றி பெற்றேன். லண்டனில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஒரு முழுமையான குழந்தையாகவே இருந்தேன். நான் என்ன செய்கிறேன் இந்த உலகம் எப்படிபட்டது என்பது எனக்கு தெரியாது. எனது மாமியார் 'நீ ஜெயித்த போது நான் உன்னை பார்த்தேன். அது எனக்கு நினைவிருக்கிறது' என்றார்.
பிரியங்கா பேசுகையில் "2000 ஆம் ஆண்டில் அவர் லண்டனில் இருந்தார், ஜோனாஸ் குடும்பம் டெக்சாஸில் இருந்தது. நிக் 7 வயதில் பிராட்வே ஷோவில் இருந்தார். எனது மாமனார் கெவின் சீனியர் போட்டிகளைப் பார்க்க விரும்புவார். அப்படி அவர் பார்த்து கொண்டு இருந்த சமயத்தில் நிக் வந்து அமர்ந்து நீ வெற்றி பெறுவதைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. எது புரிந்து கொள்ள முடியாதது! 22 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வயது 7, எனக்கு வயது 17.
இது விதியால் நடந்தது என நீங்கள் நினைக்குறீர்களா என கேட்டதற்கு "மக்கள் ஒருவருக்கொருவர் நம்பக தன்மையோடு இருக்க வேண்டும். இந்த குறுகிய வாழ்க்கையில் உங்களை முன்னோக்கி எடுத்து செல்லும் நினைவுகளை நீங்கள் உருவாக்க வேண்டும். நிக்கும் நானும் எங்கள் வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற விசித்திரமான நினைவுகளை தருணங்களை அனுபவித்தோம். அந்த நபரை நான் தேடி கண்டுபிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.