Tom Holland: மோசமான காட்சிகளில் ஸ்பைடர்மேன் நடிகர்.. இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்..
ஸ்பைடர்மேன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் டாம் ஹாலண்ட் பாலியல் காட்சிகள் நிறைந்த வெப் சீரிஸில் நடித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஸ்பைடர்மேன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் டாம் ஹாலண்ட் பாலியல் காட்சிகள் நிறைந்த வெப் சீரிஸில் நடித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஹாலிவுட் படங்களுக்கு உள்ள மவுசு
பொதுவாக ஹாலிவுட் படங்களுக்கு நம் ஊரில் ஏகப்பட்ட மவுசு உண்டு. எந்த படம் ரிலீஸ் ஆனாலும் சரி, ஹவுஸ்ஃபுல் ஆகும் அளவுக்கு தியேட்டர்களுக்கு செல்பவர்களும் உள்ளனர். இதனால் இந்தியாவில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய ஹாலிவுட் திரையுலகம் விரும்புகிறது. இந்த படங்களில் சில படங்கள் குழந்தைகளை கவரும் வகையிலாக கதையம்சம் கொண்டவையாக இருக்கும். குறிப்பாக ஸ்பைடர்மேன், ஹாரிபாட்டர் போன்ற படங்கள் குழந்தைகளின் பேவரைட் ஆக இன்றும் உள்ளது.
இதில் ஸ்பைடர்மேன் கேரக்டரில் நடித்து தனக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை இளம் நடிகர் டாம் ஹாலண்ட் கொண்டுள்ளார். இவர் ஸ்பைடர்மேன் படத்தில் உடன் நடித்த நடிகை ஜெண்டையாவை காதலித்தும் வருகிறார். இப்படியான நிலையில் தன்பாலின ஈர்ப்பாளராக தி கிரவுடட் ரூம் (The Crowded Room) என்ற வெப் சீரிஸில் டாம் ஹாலண்ட் நடித்துள்ளார்.
ஆப்பிள் டிவியின் மினி வெப் சீரிஸான தி கிரவுடட் ரூம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஏற்கனவே ஓடிடி தளத்திற்கு தணிக்கை கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் மிகவும் ஆபாசமான பாலியல் காட்சிகள் வெளிப்படையாக வைக்கப்பட்ட கதைகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தி கிரவுடட் ரூம் வெப் சிரீஸூம் அந்த வரிசையில் இணைந்து எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
சர்ச்சையை கிளப்பும் டாம் ஹாலண்ட் காட்சிகள்
எந்த காட்சியிலும் சிறிதும் கூச்சமின்றி அப்படியே கேரக்டரை டாம் ஹாலண்ட் பிரதிபலித்துள்ளார். இதுதொடர்பாக ஹேஸ்டேக்குகளை ரசிகர்கள் இணையத்தில் உலகளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். டாம் ஹாலண்டின் இந்த தன்பாலின ஈர்ப்பு கேரக்டர்கள், சக ஸ்பைடர்மேன் நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக சினிமா பிரபலங்கள் என்றாலே எந்த ஒரு கேரக்டரிலும் தயங்காமல் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் குழந்தைகளின் பேவரைட் கேரக்டர்களாக இருக்கும் டாம் ஹாலண்ட் இத்தகைய கேரக்டரில் நடித்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.