போரை கொண்டாடுவதுதான் உங்கள் தேசபக்தியா ? ஸ்டார்களை வெளுத்து வாங்கும் மக்கள்
பாகிஸ்தான் தீவிரவாத நிலையங்கள் மீது இந்தியா நடத்தியுள்ள தாக்குதல்களை தமிழ் சினிமா நடிகர்கள் பாராட்டி வரும் நிலையில் நெட்டிசன்கள் அவர்களை விமர்சித்து வருகிறார்கள்

ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், ஏராளமான பெண்கள் தங்கள் குங்குமத்தை இழந்தனர். அதனால், அதைக் குறிக்கும் வகையில், சிந்தூர்(குங்குமம்/திலகம்) என்ற பெயரில், ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா நடத்தி வருகிறது. மே 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்களுக்கு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பொங்கி எழும் நட்சத்திரங்கள்
தீவிரவாதிகளின் மீது இந்தியாவின் தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் வலுக்கும் என்றும் எண்ணற்ற அப்பாவி உயிர்கள் இதனால் பறிபோகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர்கள் ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் , நடிகர் விஜய் , சிவகார்த்திகேயன் என பலர் ஆப்ரேஷன் சிந்தூரை இந்திய நாட்டின் வெற்றியாக கொண்டாடி வருகிறார்கள். இதனால் சமூக ஆர்வலர்கள் இந்த நடிகர்களை கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
போரை கொண்டாடுவதுதான் உங்கள் தேசபக்தியா ?
போர் வந்தால் தனக்கோ தன் குடும்பத்திற்கோ, எந்தவொரு பாதிப்பும் நடக்காது எனும் ப்ரிவிலேஜுடன் வாழும், பொறுப்பற்றவர்களின் முகம் இது.
— Dr. Nagajothi 👩🏽⚕️ (@DrNagajothi11) May 7, 2025
கொஞ்சமாவது பொறுப்புடன் பேசுங்கள் 🤬
போர் அறைகூவல் விடுப்பதும், போரை கொண்டாடுவதும், உங்கள் தேசபக்தியை காட்ட பயன்படுத்துவது, அயோக்கியத் தனத்தின் உச்சம். pic.twitter.com/NzH0kwf2iD
"போர் வந்தால் தனக்கோ தன் குடும்பத்திற்கோ, எந்தவொரு பாதிப்பும் நடக்காது எனும் ப்ரிவிலேஜுடன் வாழும், பொறுப்பற்றவர்களின் முகம் இது. கொஞ்சமாவது பொறுப்புடன் பேசுங்கள் . போர் அறைகூவல் விடுப்பதும், போரை கொண்டாடுவதும், உங்கள் தேசபக்தியை காட்ட பயன்படுத்துவது, அயோக்கியத் தனத்தின் உச்சம்." என பலர் சமூக வலைதளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள்






















