Onam 2022: வேட்டியில் பப்லோ எஸ்கோபார்... நெட்ஃப்ளிக்ஸின் குறும்பான ஓணம் வாழ்த்து...!
3 சீசன்கள் கொண்ட இந்தத் தொடர் நெட்ஃப்ளிக்ஸின் பிரபல தொடர்களுள் ஒன்றாக இன்றளவும் விளங்குகிறது.
நார்க்கோஸ் சீரிஸின் மையக் கதாபாத்திரமும் கொலம்பிய பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான பப்லோ எஸ்கோபாருக்கு வேட்டி கட்டிவிட்டு நெட்ஃப்ளிக்ஸ் தளம் குறும்பாக ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் பிரபல கேங்ஸ்டர் தொடர்களில் ஒன்று ’நார்கோஸ்’. அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு வரும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மற்றும் கஞ்சா விற்பனையால் உலகின் பெரும் பணக்கார டானாக உருவெடுக்கும் பப்லோ எஸ்கோபர் இருவரின் பார்வையிலும் நகரும் வகையில் அமைந்துள்ள இந்தத் தொடருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது .
3 சீசன்கள் கொண்ட இந்தத் தொடர் நெட்ஃப்ளிக்ஸின் பிரபல தொடர்களுள் ஒன்றாக இன்றளவும் விளங்குகிறது. இந்நிலையில், பப்லோ எஸ்கோபர் வேட்டியில் இருப்பது போல் சித்தரித்து குறும்பாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்தப் புகைப்படம் கேரள நெட்டிசன்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
பத்து நாட்கள் மேல் கொண்டாடப்படும் கேரளாவின் ஆகப்பெரிய திருவிழா ஓணம் பண்டிகையாகும்.இந்த திருவிழாவானது,அறுவடை காலத்தின் தொடக்கத்தை பறை சாற்றுகிறது. மேலும் மன்னன் மகாபலி சக்கரவர்த்தியின் மேன்மையையும், கடவுள் விஷ்ணுவின் வாமன அவதாரத்தின் தோற்றத்தையும்,குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகை, இந்த ஓணம் திருவிழாவாகும். இந்த ஓணம் பண்டிகை கேரள மக்களால் வெகு விமர்சையாக, கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள்,மகாபலி சக்கரவர்த்தியை, தங்கள் இல்லங்களுக்கு வரவேற்பதோடு,அவருக்கான மிகப்பெரிய,"சத்யா" என்று சொல்லப்படும் 26க்கும் மேற்பட்ட உணவுகளை தயார் செய்து, படைப்பதிலும் சிறப்படைகிறது.
Wishing Happy Onam to all Malayali people 🌾🌾#Onam is a 10-day harvest festival celebrated in #Kerala every year
— Dr Durgaprasad Hegde (@DpHegde) September 8, 2022
Thiruvonam, the most auspicious day during the Onam festival, is celebrated today pic.twitter.com/pfyGGQ6k0A
இந்த ஆண்டு செப்டம்பர் 8 வியாழன் அன்று திருவோணம் என்று சொல்லப்படுகின்ற,ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.நீங்கள் எதிர்பாராத விதமாக இத்தகைய ஓணம் கொண்டாடும் சூழ்நிலையில் கேரளா செல்லும் சமயத்தில், தவறவிடக்கூடாத நிறைய விஷயங்கள் உள்ளன. இதில் முக்கியமானது,சதயா என்று சொல்லப்படக்கூடிய 26 வகைகளுக்கு மேலான உணவை நீங்கள் கண்டிப்பாக சுவைக்காமல் விட்டு விடக்கூடாது. கேரளா முழுமைக்கும் கிடைக்கும் பாரம்பரிய உணவுகளை அன்றைய தினம் ஒரே வேளையில், ஒரே இடத்தில், நீங்கள் சுவைத்து மகிழலாம்.