MK Stalin on NEET: "ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் வரவில்லை; ஆனால்.." - முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்கள் பதவிக்கும் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை நுழைய விட்டார்கள்.
ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் வரவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கிய பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைய விடவில்லை. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்கள் பதவிக்கும் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை நுழைய விட்டார்கள்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
View this post on Instagram
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், இளநிலை படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையானது நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. மருத்துவப்படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு கண்டிப்புடன் நிற்க, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள், நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இருப்பதாக கூறி, கணடன குரல்களை எழுப்பி வருகின்றன.
குறிப்பாக தமிழகத்தில் தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக தனது தேர்தல் அறிக்கையிலே நீட் தேர்வு விலக்கை வாக்குறுதியாக அளித்து, தற்போதும் அதற்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது. இதனிடையே நடப்பாண்டிற்க்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு கடந்த ஏப்ரல் 2 முதல் வருகிற மே 7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் தேர்வு முகமை அண்மையில், இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் நேரத்தை 3 மணி 20 நிமிடங்களாக அதிகரித்தது. 2016 ஆம் ஆண்டு முதல் 2021 வரை 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 20 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேர ஒதுக்கீடு 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என்ற கணக்கில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல நடப்பாண்டில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்தாண்டை விட நடப்பு ஆண்டில் கட்டணம் 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத்தேர்வில் இயற்பியியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.