Nayanthara Salary: ஜெயம் ரவியுடன் இணைந்த நயன்தாரா.. இந்த சம்பளம் உங்களுக்கு ஷாக் கொடுக்கும்..
இது உண்மையாக மாறினால் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறுவார்.
ஜெயம் ரவியுடன் நடிக்கும் அடுத்த படத்துக்கு நடிகை நயன்தாரா அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் முன்னணி கதாநாயாகி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. முன்னணி நடிகர்களுடன் நடிப்பதோடு மட்டுமல்லாமல், கதையின் நாயகியாகவும் நடித்து அசத்தி வருகிறார். கோலிவுட்டில் ஏறுமுகமாக இருக்கும் நயன்தாராவின் படத்துக்கு படம் ஏறிக்கொண்டேதான் வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு 3 கோடி ரூபாயாக இருந்த அவரின் 5 கோடியாக உயர்ந்தது. தற்போது, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் நயன்தாரா அதிக சம்பளம் வாங்குவார் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.
ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றிகரமான ஜோடி, அகமது இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தில் மீண்டும் கைகோர்த்துள்ளது. நயன்தாராவுக்கு 20 நாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக மாறினால் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறுவார்.
இயக்குனர் அகமதுவுடன் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒரு புதிய விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமாக உள்ளார். விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பாடம் அடுத்தவாரம் தியேட்டரில் வெளியாகிறது.
Glimpse of #TwoTwoTwo from TOMORROW 🎶 🎥 pic.twitter.com/SZRX63Zxto
— Nayanthara✨ (@NayantharaU) April 13, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்