Nayanthara Wedding : திருமணமே திரைப்படம்.. நயன்தாரா - விக்கி ஜோடி திருமணமே ப்ளாக்பஸ்டர் ஆகப்போகுது? இயக்குநர் யார் தெரியுமா?
நயன்தாரா.. தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார். அவருடைய ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்பது நிச்சயமாக கைதட்டலுக்கு உரியது தான்.
நயன்தாரா.. தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார். அவருடைய ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்பது நிச்சயமாக கைதட்டலுக்கு உரியது தான். கேரியரில் வெற்றிகரமாக இருந்தாலும் காதலில் சறுக்கல்களைக் கண்டார். ஆனால் அதனால் அவர் உடைந்து போகவில்லை. தனக்கான திரைக்களத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக தகவமைத்துக் கொண்டார். கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வரை நம்மை ரசிக்க வைத்து அவருக்கு நன்றி.. வணக்கம் என்று கூறவைத்துக் கொண்டிருக்கிறார்.
வரும் ஜூன் 9 அன்று தனது திருமண நிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலான மொழிகளின் திரைத்துறையில் தன் சிறப்பான பங்கிற்காகப் பாராட்டப்படும் நயன்தாரா, தென்னிந்திய திரைத்துறையில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலிலும் இடம்பெறுகிறார். அவருடைய கடைசி சம்பளம் ரூ.8 கோடி எனக் கூறப்படுகிறது. கடந்த 1984ஆம் ஆண்டு, நவம்பர் 18 அன்று கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் பிறந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். நயன்தாரா, கேரளா மாநிலத்தின் திருவல்லா பகுதியைச் சேர்ந்த செல்வந்தர்களாக கொடியாட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 2005ஆம் ஆண்டு, `ஐயா’ படத்தில் செல்வி என்ற கதாபாத்திரம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நயன்தாரா. வல்லவன்’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் சிம்புவுடன் நயன்தாரா உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. எனினும், சில நாள்களில் அந்த உறவு முடிவுக்கு வந்தது. பின்னர் இயக்குநரும், நடிகருமான பிரபுதேவாவுடனான அவரது உறவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எல்லாவற்றையும் கடந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை கரம் பிடிக்கவுள்ளார். மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபவ் ஸ்டார் ஹோட்டலில் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திருமணத்தில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 பேர் ரஜினி, விஜய், அஜித், நெல்சன், விஜய்சேதுபதி, சமந்தா போன்ற விஐபிக்கள் எனவும் சொல்லப்படுகிறது.
திரைப்படமாகும் திருமணம்..
நடிகை நயனின் திருமணத்தை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தான் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நயன்தாராவின் திருமணக் கதை எவ்வளவு கோலாகலமாக அதுவும் கவுதம் இயக்கத்தில் எத்தனை எத்தனை அழகியல் விவரங்களுடன் என்று நினைக்கும் போதே நெஞ்சுக்குள் மாமழை அல்லவா பெய்கிறது.
திருமணம் செய்து கொள்ளவுள்ள நயன், விக்கி ஜோடி தமிழ் திரை ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.