Nayanthara: இனிமே இதுக்கெல்லாம் நோ.. நயன்தாரா போட்ட புதிய கண்டிஷன்ஸ்..
பிரபல நடிகை நயன்தாராவுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், இனி அவர் நடிக்க இருக்கும் படங்களுக்கு புது நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை நயன்தாராவுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், இனி அவர் நடிக்க இருக்கும் படங்களுக்கு புது நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, திருமணத்திற்கு பிறகு தான் ஒப்புக்கொள்ளும் படங்களில் நயன்தாரா நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதில்லை என்றும் நடிகர்கள் தன்னை தொட்டு நடிக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்துவரும் நயன், ஷாருக்கானுடனான காட்சிகளிலும் தள்ளி நின்று நடித்தாகவும் சொல்லப்படுகிறது.
View this post on Instagram
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் பயண தூரம், விஐபி பாதுகாப்பு போன்ற காரணங்களால் தேவஸ்தானம் அனுமதி மறுத்ததால் பின் மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Exclusive! #Nayanthara & #VigneshShivan's Thirupati Visit Photos ❤️ 1/n#VigneshShivanNayanthara #WikkiNayan #Nayan #VigneshShivanMarriage pic.twitter.com/PQam8yzqEh
— Happy Sharing By Dks (@Dksview) June 10, 2022
அதன்பின் மாட வீதிகளில் இந்த ஜோடி போட்டோஷூட் நடத்தினர். அப்போது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் செருப்பு கால்களுடன் சென்றது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருப்பதி சம்பவம் குறித்து விளக்கம் தெரிவித்து விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதினார்.