Natchathiram Nagargirathu: நட்சத்திரம் நகர்கிறது... கதாப்பாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Natchathiram Nagargirathu:ஆண், பெண், பால் புதுமையினர் என அனைத்து சமூகத்தினரும் தங்கள் பார்வையில் காதல் என்றால் என்ன எனக் கலந்துரையாடும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ கவனம் ஈர்த்துள்ளது.
’நட்சத்திரம் நகர்கிறது’ (Natchathiram Nagargirathu) படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வழக்கத்துக்கு மாறான காதல் கதை!
’அழுகை சோகம் இல்லாமல் ஜாலியா ஒரு காதல் கதை’ என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த வீடியோ, ஆண், பெண் பாலினங்கள் தாண்டி பால் புதுமையினர் தங்கள் பார்வையில் காதல் என்றால் என்ன எனக் கலந்துரையாடும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் திருப்புமுனை இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் ரஞ்சித், ’சார்பாட்டா பரம்பரை’ வெற்றிக்குப் பிறகு காதல் கதை ஒன்றை படமாக்குவதாக அறிவித்த நிலையில், இக்கதையிலும் அவர் வழக்கமான காதல் கதைகளின் எல்லைகளைத் தகர்த்து வித்தியாசமான காதல் கதையை திரையில் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
காதல் என்பது...
அதன்படி, முன்னதாக வெளியான படத்தின் இரண்டு போஸ்டர்களும் வண்ணமயமான பால்புதுமையினரின் வானவில் அடையாள பின்னணியில் வெளியானதை அடுத்து இப்படம் ஆண், பெண் மற்றும் LGBTQ சமூகத்தினரின் காதல் கதையைப் பேசும் படமாக இருக்கலாம் என யூகங்கள் முன்வைக்கப்பட்டன.
அந்த வகையில் தற்போது ”காதல் அரசியல் சார்ந்தது, உலகமயமானது, காதலுக்கு தான் பாலின பாகுபாட்டை ஒழிக்கும் சக்தி உள்ளது, நம் ஊர் தவிர்த்து உலகம் முழுவதும் பல பரிமாணங்களைத் தாண்டி சென்று கொண்டுள்ளது” போன்ற கருத்துகள் இந்த வீடியோவில் இடம்பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Love is Political!
— pa.ranjith (@beemji) July 13, 2022
Bringing you the நட்சத்திரங்கள் of #NatchathiramNagargiradhu!
▶️ https://t.co/hnVUfeY80s@officialneelam @vigsun @Manojjahson @YaazhiFilms_ @thinkmusicindia
படக்குழு
காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்துள்ளனர். கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தென்மா இசையமைத்துள்ளார்.
As vibrant as the colours of a rainbow!
— pa.ranjith (@beemji) July 12, 2022
As bright as the stars in the sky!
Introducing the நட்சத்திரங்கள் of #NatchathiramNagargiradhu tomorrow at 6PM!@officialneelam @vigsun @Manojjahson @YaazhiFilms_ @tenmamakesmusic @kishorkumardop @EditorSelva @anthoruban @Jayaraguart pic.twitter.com/K7HqJODiNc
முன்னதாக பா.ரஞ்சித் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றையே படமாக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்படம் தள்ளிப்போனது. இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.