Naga Chaitanya : இது வெட்டிங் சீசன் போல...நாகசைதன்யா ஷோபிதா திருமணத்திற்கு விலைபேசிய ஓடிடி நிறுவனம்
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதாவின் திருமண வீடியோவை பெரும் தொகை கொடுத்து பிரபல ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
திருமண வீடியோக்களை வெளியிடும் ஓடிடி தளங்கள்
ஒவ்வொரு சீசனுக்கு ஓடிடி தளங்கள் குறிப்பிட்ட ஜானர் படங்கள் அல்லது வெப் சீரீஸ்களை வெளியிட்டு வருகின்றன. தென் இந்தியாவில் ஓடிடி தளங்கள் பரவலாகியபோது பாவக் கதைகள் மாதிரியான சமூக அக்கறைக் கொண்ட கதைகளை வெளியிட்டது. அடுத்தடுத்து ஹாரர் , த்ரில்லர் , ஃபேண்டஸி என ஓவ்வொரு காலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஜானரில் படங்கள் வெளியாகி வந்தன. அந்த வகையில் ஓடிடி தளங்களுக்கு இது வெட்டிங் சீசன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒட்டுமித்த உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்வை பிரபல ஓடிடி தளம் வெளியிட்டது. அதேபோல சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் திருமண காட்சிகள் முக்கிய பங்கு வகித்தன. தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதாவின் திருமண நிகழ்ச்சியை வெளியிடும் உரிமத்தை பெற்றுள்ளது பிரபல ஓடிடி நிறுவனம்
நாக சைதன்யா ஷோபிதா திருமணம்
தெலுங்கு முன்னணி நடிகராக திகழும் நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை ஷோபிதாவுக்கு வரும் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாதில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஹைதராபாதின் புகழ்பெற்ற அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் இந்த திருமண நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிபதாப் பச்சன் , ஆமீர் கான் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தெலுங்கு திரை நட்சத்திரங்களான மகேஷ் பாபு மற்றும் சிரஞ்சீவி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது தவிர்த்து நடிகர் நாகர்ஜூனாவின் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
கிட்டதட்ட 8 மணி நேரம் இந்த திருமண சங்குகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்ச்சியை வெளியிடும் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு விலை பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . சமீபத்தில் வெளியான நயன்தாரா பற்றிய ஆவணப்படம் 60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நாக சைதன்யா மற்றும் ஷோபிதாவின் திருமண நிகழ்வு இதைவிட இரு மடங்கு தொகைக்கு விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
மேலும் படிக்க : A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Siddharth : முதல்ல படம் நல்லா இருக்கனும்... புஷ்பா 2 படம் பற்றி கேட்டதால் கடுப்பான சித்தார்த்