Siddharth : முதல்ல படம் நல்லா இருக்கனும்... புஷ்பா 2 படம் பற்றி கேட்டதால் கடுப்பான சித்தார்த்
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படம் வெளியாவது குறித்து நடிகர் சித்தார்த் கொடுத்த பதில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது
மிஸ் யூ
நடிகர் சித்தார்த் நடிப்பில் வரும் நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் மிஸ் யூ. ‘மாப்ள சிங்கம்’ மற்றும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படங்களின் இயக்குநர் N.ராஜசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்கு படமாகத் தயாராகியுள்ளது. '7 miles per second' நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று ஹைதபாதில் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சித்தார்த். அப்போது மிஸ் யூ படம் வெளியாகிய ஒரு வாரத்தில் புஷ்பா 2 படம் வெளியாக இருக்கிறது . இது மிஸ் யூ படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு சித்தார்த் இப்படி பதிலளித்துள்ளார்
புஷ்பா படம் குறித்து நடிகர் சித்தார்த்
" சினிமாவிற்கு வந்த 25 ஆண்டுகளில் நான் ஒன்றை கற்றுக் கொண்டிருக்கிறேன் . அதாவது என் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களைப் பற்றி நான் கவலைப்படலாம் கருத்து சொல்லலாம். ஆனால் என் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அதே நேரம் எல்லா படமும் பெரிய படம் தான். ஒரு படத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை பார்த்து அது பெரிய சினிமா சின்ன சினிமா என்று பிரிக்கக் கூடாது. மிஸ் யூ படம் வெளியாகி ஒரு வாரம் திரையரங்கில் ஓட வேண்டும் என்றால் அந்த படத்தில் நல்ல விஷயம் இருக்க வேண்டும். அதேபோல் ரசிகர்களுக்கு என்னுடைய படம் பிடிக்க வேண்டும். ஒரு நல்ல படத்தை யாரும் திரையரங்கில் இருந்து தூக்க முடியாது. 2006 , 2007 ஆம் ஆண்டில் செய்திருக்கலாம். ஆனால் சமூக வலைதளங்கள் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் ஒரு நல்ல படத்தை ஒரு பெரிய படத்திற்காக திரையரங்கைவிட்டு தூக்கிட முடியாது. "என சித்தார்த் தெரிவித்துள்ளார்
I do NOT fear about Pushpa 2.
— Manobala Vijayabalan (@ManobalaV) November 25, 2024
- Siddharth pic.twitter.com/s30s95DKUE