Naane Varuvean Runtime: ஹாலிவுட் படம் மாதிரி.. நறுக்குனு! 'நானே வருவேன்' படத்தின் ரன்னிங் டைம்!
“நானே வருவேன்” ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
View this post on Instagram
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம் குறித்து அவ்வப்போது அப்டேட்டுகளோடு புதுப்புது போஸ்டர்களும் வெளிவருவது வழக்கம். இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்துள்ளது. ரிலீசுக்கு தயாராகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 27 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியானது. சமீபத்தில் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நானே வருவேன் படம் 2 மணிநேரம் 2 நிமிஷம் ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மணி நேரம் என்பதால் படம் ரசிகர்களுக்கு அலுப்பு கொடுக்காமல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சில தகவல்கள்..
நானே வருவேன் திரைப்படம் இங்கு வெளியாக இருக்கும் அதே நாளில் அமெரிக்காவிலும் வெளியாக இருக்கிறது. அமெரிக்காவில் இந்த திரைப்படத்திற்கான புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், அதில் படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியானது.செல்வராகவனின் சைக்கோ த்ரில்லர் திரைப்படமான நானே வருவேன் திரைப்படத்திற்கு U/A சென்சார் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.