மேலும் அறிய

Nandhini - Yogesh | "சொந்த வீடு இன்னும் வாங்கல.. ஆனா.." வைரலாகும் மைனா நந்தினி-யோகேஷ் ஜோடியின் Home Tour..

சின்னத்திரை போன்ற ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நந்தினி வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத்திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தி வருகிறார்.

மைனா நந்தினி – யோகேஷ் தம்பதியினர் தங்களுடைய புதிய வீட்டினை ரசிகர்களுக்கு சுற்றிக்காட்டிய ஹோம் டூர் வீடியோ 10 லட்சம் பார்வையாளர்களுடன், ட்ரெண்டிங்கில் உள்ளது.

மைனா என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது சரவணன் – மீனாட்சி சீரியலில் நடித்த நந்தினி தான். மதுரைக்காரப்பெண்ணாக மட்டுமில்லாமல், ஊர் பாஷையுடன் ரசிகர்கள் மனதில் இதுவரை நீங்கா இடம்பிடித்துவருகிறார். சின்னத்திரை சீரியல்கள், மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நந்தினி வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத்திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தி வருகிறார்.

Nandhini - Yogesh |

பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் நந்தினிக்கு பிரியமாக கணவராக யோகேஷ். நந்தினி – யோகேஷக்கு துருவன் என்ற குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் myna wings என்ற தனது யூடியூப் சேனலில் ஒளிப்பரப்பி வருகின்றனர். இவர்களின் ஒவ்வொரு செயல்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வந்த நிலையில், தற்போது டிரெண்டிங்கில் உள்ள Home tour வீடியோவையும் தனது சேனலில் ஒளிப்பரப்பு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோடு மட்டுமின்றி புதிய வீடு வாங்கியதாக நினைத்து நந்தினிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துவந்தனர்.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தன்னுடைய ஹோம் டூர் தொடக்கத்தில், சத்தியமா நான் வீடெல்லாம் வாங்கவில்லை என்றும் வாடகை வீட்டிற்குத்தான் செல்கிறேன் என்று தெரிவித்திருப்பார்.  மேலும் பார்த்ததுமே பிடித்துவிட்டால், வீட்டை வாங்க வேண்டும் நினைத்ததோடு பால் காய்ச்சி குடியேறி விட்டதாக கூறியுள்ளனர். இதோடு இந்த வீடியோவில் இந்த வீட்டிற்காக அவர்கள் என்னென்ன பொருள்கள் வாங்கியிருக்கிறார்கள்? என்பது குறித்தும்  வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

முதலில் நந்தினி – யோகேஷ் லிவிங் ஏரியாவில், இவர்கள் இருவரும் சேர்ந்து வாங்கிய விருதுகள் மற்றும் நந்தினி அவர்கள் சகோதரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் ஆகியவற்றை வைத்துள்ளதை காண்பித்தனர். இதோடு எப்போது இந்தப்படம் எடுத்துக்கொண்டது? இதன் வரலாறு ஆகியவற்றையும் தனது வீடியோவில் பகிர்ந்துக்கொண்டனர்.

மேலும் நந்தினி தன்னுடைய உழைப்பில் முதன் முதலாக வாங்கிய டிவி பற்றிய சுவாரஸ்சிய விஷயங்களையும் பகிர்ந்துக்கொண்டார். அடுத்ததாக யோகேஷ் நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம், அங்கிருக்கும் ரெக்லைனர்ஸ் பார்த்து ஏக்கமாக இருப்பாராம். ஆனால் தன் வீட்டில் தற்போது அட்வான்ஸ்டு ரெக்லைனரஸ் இருப்பதை நினைத்துப்பெருமைப்படுவதாகவும் உணர்ச்சிவசப்படுகிறார் யோகோஷ்.

இதனையடுத்து அவர்களின் படுக்கை அறைக்கு அழைத்துச்செல்வது போல் வீடியோ அமைந்திருக்கும். அங்கு முன்னாள் இருந்த வீட்டில் பரண்மீது கிடந்தப்பொருள்களையெல்லாம் பயன்படுத்தமுடிகிறது எனவும், இதனை அழகாக அடுக்கி வைத்து காண்பித்தனர். இதோடு ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் மரத்திலான மின்விசிறியை சோதனையை செய்தும் காண்பித்தனர்.

Nandhini - Yogesh |

தொடர்ந்து தங்களது ஹோம் டூர் வீடியோவில், டைனிங் , பூஜை மற்றும் சமையல் அறை என அனைத்தையும் ஒரு விசிட் அடித்துக்காட்டினார்கள்.மேலும்  வழக்கம் போல் அனைவரும் ஹோம் டூரில் காட்டும் ஸ்டோர் ரூம் முதல் பாத்ரூம் என அனைத்தையும் சுற்றிக்காட்டி தனது காணொளியில் நிறைவு செய்தனர். 24 நிமிடங்கள் இருக்கும் இந்த வீடியோ தற்போது 10 அதிகமான வியூஸ்களைப்பெற்று,  டிரெண்டிங்கிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget