மேலும் அறிய

Vijay Antony: மாணவி சத்யாவை கொன்ற சதீஷை ரயிலில் தள்ளிவிட்டு கொல்லுங்கள்...நடிகர் விஜய் ஆண்டனி ஆவேசம்

சென்னை பரங்கிமலையில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்று சத்யா என்ற கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி விட்ட கொலையாளி சதீஷை பொறுமையாக விசாரிக்காதீர்கள் என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

சென்னை பரங்கிமலையில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்று சத்யா என்ற கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து சதீஷ் என்ற இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் இதுதொடர்பாக நடந்த விசாரணையில் ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரின் மகனான சதீஷூம், அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பெண் தலைமை காவலரின் மகளும் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருபவருமான சத்யா நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இருவரின் நட்பானது படிப்படியாக வளர்ந்து காதலாக மாறியதாகவும், ஒரு கட்டத்தில் அக்காதலை சத்யா முறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

இதனிடையே வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக சத்யா பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சதீஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கடற்கரை நோக்கி செல்லும் ரயில் நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தப்போது சத்யாவை பிடித்து சதீஷ் தள்ளியுள்ளார். இதில் ரயிலில் சிக்கிய சத்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சதீஷை பிடிக்க முயற்சிப்பதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடினார். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் துரைப்பாக்கம் அருகே பதுங்கியிருந்த சதீஷை நள்ளிரவில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் அக்டோபர் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சத்யா இறந்த துக்கம் தாங்காமல் அவரது தந்தை ராஜமாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.இதனால் குற்றவாளி சதீஷூக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget