சமந்தா பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் சீதா மஹாலட்சுமி.. என்ன தெரியுமா?
சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுவான டிபி ஒன்றை வெளியிட இருக்கிறார் சீதா ராமம் படத்தில் பல மனங்களை கவர்ந்த ம்ரூணால் தாக்கூர்

சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா தனக்கு மையோசிடிஸ் என்கிற நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு இருப்பதாக தனது சமுக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.முதலில் தனது யசோதா திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகள்ர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சமந்தா. “வாழ்க்கை எல்லாருக்கும் அத்தனை எளிதாக இருப்பதில்லை” என தொடங்கி தனக்கு மையோசிடிஸ் என்னும் நோய் எதிர்ப்புத் திறன் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனை தொடர்ந்து சமந்தா தனது திரையுலகப் பயணத்தை தொடர்வாரா மாட்டாரா என சமூக வலைதளத்தின் பெரும் விவாதம் எழுந்தது.
இத்தகைய சூழலில் சமந்த நடிப்பில் உருவான சாகுந்தலம் படம் வெளியானது. ஆனால் இந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. ”சமந்தாவின் திரைப்பயணம் இத்துடன் முடிந்துவிட்டது. இப்படியான நிலையில் அவரால் தொடர்ந்து படத்தில் நடிக்க முடியுமா,அப்படியே நடித்தாலும் அது அனைவரும் பார்த்து ரசித்த அதே கதிஜாவாக இருப்பாரா என்று இப்படியான கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது” இந்தச் சூழலில் அவருக்கு நாளை பிறந்த நாள் வருகிறது.
சமந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் ஒரு செய்தி மிகத் தீவிரமாக பரவியது. அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொதுவான டிபி ஒன்று அவரது ரசிகர்களால் வெளியிடப்பட உள்ளது. இதில் இன்னுமொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் இந்த டிபியை வெளியிட இருப்பது சீதா என்கிற ம்ருணால் தாக்கூர்தான்.ஆம் சீதா ராமம் படத்தில் சீதாவாக வந்து நம் அனைவரையும் ’அடியேய்’ சீதா என்று அழைக்க வைத்த ம்ருணால் தாக்கூர்.
தற்சமயம் சமந்தா ஹிந்தி தெலுங்கு தமிழ் என பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கிய ’சிட்டேடல்’ வெப் சீரிஸின் ஹிந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு இணையாக சமந்தா நடித்து வருகிறார். இந்த சீரிஸை ராஜ் மற்றும் DK ஆகியவர் இயக்கவுள்ளனர். மிகப்பெரும் பொருட்செலவில் இந்த சீரீஸை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள் படக்குழுவினர். மேலும் 2018-ஆம் ஆண்டில் வெளிவந்த ’மஹாநதி’ படத்தை தொடர்ந்து சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் குஷி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்த படத்தினை ஷிவா நிர்வானா இயக்கியுள்ளார். ஒரு ராணுவ வீரருக்கும் இமய மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையிலான ஒரு காதல் கதையாக இப்படம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படியாக அடுத்தடுத்து படங்கள் வரிசையில் நிற்க சமந்தாவின் உடல் நிலை குறித்தான செய்திகள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் அண்மையில் வெளியான அவரது சாகுந்தலம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. ஆனால் ரசிகர்கள் தங்களது ஆதரவை என்றும் கைவிட்டுவிடவில்லை.
நாளை ம்ருணால் தாக்கூர் வெளியிடவிருக்கும் பொதுவான டிபியை பகிர்ந்து சமந்தாவின் பிறந்தநாளை கொண்டாட மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

