Thudarum Review : த்ரிஷ்யம் ஸ்டைலில் மீண்டும் மிரட்டிய மோகன்லால்...துடரும் திரைப்பட விமர்சனம்
மோகன்லால் ஷோபனா இணைந்து நடித்து மலையாளத்தில் வெளியாகியுள்ள துடரும் திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது

மோகன்லால் நடித்துள்ள துடரும்
தருன் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் துடரும். 15 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தில் மோகனலால் ஷோபனா இணைந்து நடித்துள்ளார்கள். பிரகாஷ் வர்மா , தாமஸ் மேத்யு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மோகன்லால் நடித்து வெளியான மலைக்கோட்டை வாலிபன் , பரோஸ் , எம்புரான் என அடுத்தடுத்து மூன்று படங்கள் தோல்வியை சந்தித்தன. இப்படியான நிலையில் பெரியளவில் ப்ரோமோஷன் எதுவும் இல்லாமல் திரையரங்கில் வெளியாகியுள்ள துடரும் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்
துடரும் பட விமர்சனம்
அடுத்தடுத்து மூன்று தோல்விகளுக்குப் பின் மோகன்லால் ஒரு சூப்பரான கதையுடன் கம்பேக் கொடுத்திருக்கிறார். த்ரிஷ்யம் படத்தைப் போலவே குடும்பத்தை மையப்படுத்திய கதை துடரும் . முதல் 20 நிமிடம் கொஞ்சம் நிதானமாக சென்றாலும் அடுத்து படம் வேகமெடுக்கிறது. எந்த வித தொய்வும் இல்லாமல் பயங்கர சுவாரஸ்யமாக செல்கிறது" ஒருவர் கூறியுள்ளார்
#Thudarum [#ABRatings - 4/5]
— AmuthaBharathi (@CinemaWithAB) April 25, 2025
- Above Average 1st half followed by an Excellent 2nd Half💥
- One man show from the man #Mohanlal, where he elevated the film to the next level with performance🌟👏
- Initial 45 Mins was slow. Picked up the phase after that & screenplay never slowed… pic.twitter.com/isCHlFV1VF
"முழுக்க முழுக்க உணர்ச்சிகளை மையமாக வைத்து நகர்கிறது துடரும் திரைப்படம். இந்த படத்தை மோகன்லால் தனது நுணுக்கமான நடிப்பால் தாங்கிச் செல்கிறார் " என மற்றொருவர் தெரிவித்துள்ளார்"
Peak Lalettan mode! ❤️🔥
— Hari Travancore (@Manushyan_offcl) April 25, 2025
Thudarum is a masterclass in subtle, soulful storytelling — and Lalettan owns every frame. No loud moments, no gimmicks. Just raw, restrained emotion that hits you deep.
His eyes speak what words can't. This is vintage Mohanlal. Pure magic. 🙌#Thudarum…





















