தனியாக சுற்றுலா செல்லும் பெண்களுக்கான டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

பயணத்துக்கு தேவையான அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பயணச் சீட்டுகள், ஹோட்டல் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்துகொள்வது நல்லது.

உங்களது உடைமைகளான செல்போன், அணிகலன்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவும். இவற்றை வெளியில் தெரியுமாறு எங்கும் வைக்க வேண்டாம்.

தங்கும் இடம், அருகில் உள்ள இடங்களில் பாதுகாப்பு வசதிகளை கவனிக்க வேண்டும். புதிய இடம் என்றால் சற்று பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யவும்.

தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். நீங்கள் தனியாக பயணிக்கிறீர்களா என்று கேட்கப்படும் சில நேரங்களில் அதற்கான உண்மையான பதில் கொடுக்காமல் இருக்கலாம்.

கைத்தொலைப்பேசி ஒரு இடத்தில் வேலை செய்யவில்லை என்றால் ஒரு உள்ளூர் தொலைப்பேசி எண்ணை வாங்கிக்கொள்ளுங்கள். எப்போதும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். அவசர உதவி தேவைப்பட்டால் அவர்களை அணுக அது உதவும்.

பயண திட்டங்களை பெற்றோர் அல்லது வீட்டில் இருப்பவரிடம் பகிர வேண்டும். அது குறித்த அப்டேட் வழங்குவதும் நல்லது.

எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருப்பீர்கள் என்ற தகவல்களை உங்கள் நண்பர் அல்லது உறவினர் ஒருவரிடம் எப்பொழுதும் தெரிவித்துவிடுங்கள்.

பாதுகாப்பு, அவசரகால உதவி தொடர்பான தொலைப்பேசி எண், யாரை அணுக வேண்டும் ஆகியவற்றை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

பயணங்களின்போது பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துங்க.