Modern Love Hyderabad: மாடர்ன் லவ் ஹைதராபாத்.. ஜூலை மாசம் ட்ரீட் காத்திருக்கு மக்களே..
மாடர்ன் லவ் ஹைதரபாத்’ ஆந்தாலஜியில் இடம்பெறும் படங்களின் தலைப்பு, இயக்குநர், நடிகர் ஆகியவற்றின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம். இது வரும் ஜூலை 8 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
`மாடர்ன் லவ்’ ஆந்தாலஜி தொடரின் ஹைதராபாத் நகரத்தின் வெர்ஷன் வரும் ஜூலை 8 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகேஷ் குக்குனூர், வெங்கடேஷ் மஹா, உதய் குர்ராலா, தேவிகா பஹுதனம் ஆகியோர் இயக்கிய ஆறு மன நெகிழ்வான கதைகள் மனித உறவுகளில் இருக்கும் பல்வேறு பரிமாணங்களையும், உணர்வுகளையும் பற்றி பேசுவதாக உருவாகி வருகிறது `மாடர்ன் லவ் ஹைதராபாத்’.
எஸ்.ஐ.சி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் இந்த சீரிஸ் அமேசாம் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. அமெரிக்க நாளிதழ் `தி நியூ யார்க் டைம்ஸ்’ இதழில் வெளிவரும் பிரபல கட்டுரைகளின் அடிப்படையில், ஹைதராபாத் நகரத்தில் நடைபெறும் கதைகளாக இந்த சீரிஸ் உருவாகி வருகிறது.
இந்த ஆந்தாலஜியில் இடம்பெறும் படங்களின் தலைப்பு, இயக்குநர், நடிகர் ஆகியவற்றின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம்..
1. MY UNLIKELY PANDEMIC DREAM PARTNER – நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ரேவதி, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
2. FUZZY, PURPLE AND FULL OF THORNS - நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஆதி பினிசெட்டி, ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
3. WHAT CLOWN WROTE THIS SCRIPT!– uதய் குர்ராலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் அபிஜீத் டுட்டாலா, மாளவிகா நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.
4. WHY DID SHE LEAVE ME THERE…? - நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சுஹாசினி மணிரத்னம், நரேஷ் அகஸ்தியா ஆகியோர் நடித்துள்ளனர்.
5. ABOUT THAT RUSTLE IN THE BUSHES – தேவிகா பஹுதனம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் உல்கா குப்தா, நரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
6. FINDING YOUR PENGUIN… – வெங்கடேஷ் மஹா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் கோமளி பிரசாத் நடித்துள்ளார்.
`மாடர்ன் லவ் ஹைதராபாத்’ ஆந்தாலஜி தொடரின் ஷோரன்னரும், இயக்குநர்களுள் ஒருவரான நாகேஷ் குக்குனூர் இதுகுறித்து பேசியுள்ளதில், `நியூ யார்க், மும்பை ஆகியவற்றைப் போன்ற பெரிய நகரமாக இல்லாமல், `மாடர்ன் லவ் ஹைதராபாத்’ தொடரின் அழகே ஹைதரபாத் என்பது கடந்த பத்தாண்டுகளில் திடீரென வளர்ந்த நகரமாக இருப்பதோடு, பல கலாச்சாரங்களும் இங்கே இருக்கின்றன. சமகால காதல் கதைகள் மூலமாக இந்த நகரத்தின் கலாச்சாரமும், சமூக கட்டமைப்பையும் இந்த ஆந்தாலஜி மூலம் புரிந்துகொள்ளலாம்’ எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்