Harry Potter Dumbledore: ஹாரி பாட்டர் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி... டம்பிள்டோர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்!
பிரிட்டீஷ் மேடை நாடக கலைஞரான இவர் ஹாரிபாட்டர் நாவலின் 8 பாகங்களிலும் நடித்து மாயஜாலத்தை விரும்பும் குழந்தைகளுக்கு பிடித்த நடிகராக இருந்தார்.
Harry Potter Dumbledore: 90 கிட்ஸ்கள் கொண்டாடி ரசித்த படம் தான் ஹாரி பாட்டர். மாயா ஜால உலகில் நடக்கும் சாகசங்கள், பறக்கும் புத்தகங்கள், அமானுஷ்யங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் குழந்தைகளை ரசிக்க வைத்து என்றென்றும் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது.
ஆங்கிலத்தில் ஜே.கே. ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 8 பாகங்களாக உலகளவில் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரையும் கட்டிப்போட்ட ஒரு சீரிஸாக ஹாரி பாட்டர் இருந்தது. ஹாரிபாட்டரின் மாயா ஜால உலகில் குழந்தைகள் தங்களையே மறக்கும் அளவுக்கு ஹாரி பாட்டரை விரும்பி பார்த்தனர்.
இதில் ஹார் பாட்டர், ஹெர்மாயினி, ரான் வீஸ்லி, டம்பிள் டோ, டோப்பி கதாபாத்திரங்கள் நாவலுக்கு வலு சேர்க்கும் விதமாக இருந்தன. நடிகர்கள் தங்களின் அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில் ஹாரிபாட்டரில் ஹாரியை வழிநடத்தி செல்லும் ஆல்பஸ் டம்பிள்டோர் கதாபாத்திரத்தில் நடித்த மைக்கேல் கேம்போன் இன்று உயிரிழந்தார். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
R.I.P Michael Gambon 🤍🕊️
— Critics Choice Awards (@CriticsChoice) September 28, 2023
The actor best known for his role as Hogwarts headmaster Albus Dumbledore in “Harry Potter” movies, has died. He was 82.#michaelgambon #harrypotter pic.twitter.com/ULju7wh3Qp
இந்த நிலையில் மைக்கேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரின் மனைவி லேடி கேம்போன் அறிவித்துள்ளார். மைக்கேல் கேம்போனின் இழப்பால் பேரழிவிற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். பிரிட்டீஷ் மேடை நடிகராக இருந்த இவர், 1965ம் ஆண்டு வெளிவந்த ஒதெல்லோ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தொலைக்காட்சி, வானொலி மற்றும் திரைத்துறையில் நடித்த இவர் அனைவரும் விரும்ப கூடிய ஒரு நபராக வலம் வந்தார்.
மேலும் படிக்க: Chithha Movie Review: நெகிழ வைக்கும் உண்மைக்கதை... சித்தார்த் நடித்திருக்கும் 'சித்தா' திரை விமர்சனம்!