(Source: Poll of Polls)
Michael Douglas: ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸூக்கு சத்யஜித்ரே விருது அறிவிப்பு!
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான மைக்கேல் டக்ளஸூக்கு சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த வாழ்நாள் சாதனையாளருக்கான திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இந்திய திரைப்பட விழா
இந்திய மற்றும் உலக மொழி திரைப்படங்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய நிகழ்வு சர்வதேச இந்திய திரைப்பட விழா. ஆண்டுதோறும் கோவாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மத்திய அரசின் நிதியுதவி பெற்று அதன் கீழ் 54 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்தும் தயாரிக்கப்படும் பல மொழித் திரைப்படங்கள் இந்த விழாவில் எட்டு நாட்களுக்கு திரையிரப்படும். மேலும் உலகம் முழுவதும் இருந்தும் திரைப்பட ரசிகர்கள் இந்த விழாவுக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற இருக்கிறது.
இந்தியத் திரைப்படங்கள்
பிறமொழித் திரைப்படங்கள் போல் இந்திய திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தியன் பனோரமா என்கிற வகைமையின் கீழ் பல்வேறு இந்தியப் படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகின்றன. இந்தப் பிரிவில் படங்கள் திரையிடப்படுவதற்கான விண்ணப்ப தேதிகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
மைக்கேல் டக்ளஸுக்கு விருது
I'm delighted to announce that Michael Douglas, the distinguished Hollywood Actor and Producer, will be honoured with the prestigious Satyajit Ray Excellence in Film Lifetime Award at the 54th International Film Festival Goa.
— Anurag Thakur (@ianuragthakur) October 13, 2023
His deep love for our country, 🇮🇳, is well known,…
இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளரான மைக்கேல் டக்ளஸ்- க்கு இந்த விழாவில் உயரிய விருதான சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளபடி “புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ், 54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில், புகழ்பெற்ற சத்யஜித் ரே திரைப்பட வாழ்நாள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது நாட்டின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த அன்பு நன்கு அறியப்பட்டதாகும், மேலும் IFFI54இல் நமது செழுமையான சினிமா கலாச்சாரம் மற்றும் தனித்துவமான பாரம்பரியங்களை வெளிப்படுத்த தெற்காசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவிற்கு அவரை, அவரது மனைவி கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் அவர்களது மகனை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். !! “ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : LEO Special Show: 9 மணிக்கு தான் லியோ சிறப்புக்காட்சி தொடங்க வேண்டும்.. தமிழ்நாடு அரசு அதிரடி!