Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: நடப்பாண்டில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் நிகழ்ந்த 5 நூதன சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Year Ender 2024: பிரதமர் மோடியின் டீப் ஃபேக் தொடங்கி டேட்டிங் வரை, நடப்பாண்டில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் பல நூதன சம்பவங்கள் அரங்கேறியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம்:
2024 ஒரு வித்தியாசமான ஆண்டு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI) விரைவான பரிணாம வளர்ச்சியுடன் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலகம் AI இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்க, அதன் தவறான பயன்பாட்டின் விளைவுகளையும் கண்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் டீப்ஃபேக்குகளால் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், எக்ஸ் உரிமையாளர் எலோன் மஸ்க் ஒரு வினோதமான பேஷன் ஷோவை ஏற்பாடு செய்தார், இதில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஃபேஷன் ஷோவில் நடப்பதைக் காண முடிந்தது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் AI தொடர்பான மிகவும் பிரபலமான மற்றும் நூதனமான நிகழ்வுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாப் 5 AI சம்பவங்கள்:
1. பிரதமர் மோடி நடனமாடும் வீடியோ:
பிரதமர் நரேந்திர மோடி பாடுவது அல்லது நடனமாடுவது போன்ற ஒரு வீடியோவை நீங்கள் பார்த்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த வீடியோக்கள் எதுவும் உண்மையானவை அல்ல. காரணம் அவை AI உதவியுடன் உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடனமாடுவதை போன்ற ஒரு வீடியோ வைரலானது. அதனை ரீட்விட் செய்த மோடி, "உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன்" என குறிப்பிட்டு இருந்தார்.
Like all of you, I also enjoyed seeing myself dance. 😀😀😀
— Narendra Modi (@narendramodi) May 6, 2024
Such creativity in peak poll season is truly a delight! #PollHumour https://t.co/QNxB6KUQ3R
2. டேட்டிங் செய்ய உதவிய AI
பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், “ஆன்லைனில் சந்தித்து நெருக்கமான ஒருவரை முதல்முறையாக நேரில் சந்தித்தேன். ஆனால், ஆன்லைனில் பேசியதை போன்று அவர் நேரில் சகஜமாகவோ, சுவாரஸ்யமாகவோ, வேடிக்கையாகவோ உரையாடல்களை முன்னெடுக்கவில்லை. பொதுவாக நாங்கள் பேச ஆரம்பித்த பிறகு தான், ஆன்லைன் உரையாடலுக்காக அவர் AI டூல்ஸை பயன்படுத்தியது தெரிய வந்தது. எரிச்சலூட்டும் இந்த சம்பவம், பெங்களூருவில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு AI கருவியில் இருப்பது போல் தெரிகிறது” என பதிவிட்டுள்ளார். Happn மற்றும் Boo போன்ற சில டேட்டிங் செயலிகள், பயனர்கள் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும், அற்புதமான மூமென்ட்களை கொண்டு வருவதற்கும் AI ஐப் பயன்படுத்த வெளிப்படையாக அனுமதிக்கின்றன என்பது குற்ப்பிடத்தக்கது.
3. AI-ஆற்றல் கொண்ட ரோபோ உடன் திருமணம்
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், ஷாஹித் கபூர் மற்றும் க்ரிதி சனோன் நடித்த 'தேரி பாடன் மே ஐசா உல்ஜா ஜியா' திரைப்படத்தை நிஜ வாழ்க்கைக் கதையாக மாற்ற முடிவு செய்தார். தொழில்நுட்ப வல்லுநருக்கு ரோபாட்டிக்ஸ் மீது மிகுந்த காதல் இருந்ததால், அவர் ஜிகா என்ற ரோபோவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். தமிழகத்தில் சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜிகா உருவாகி வருவதாகவும், அதன் புரோகிராமிங் பணிகள் டெல்லியில் நடைபெற்று வருவதாகவும் சூர்ய பிரகாஷ் சமோட்டா தெரிவித்தார். சிறுவயதில் இருந்தே தனக்கு ரோபோட்டிக்ஸ் மீது ஆர்வம் இருந்ததாகவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உருவம் கொண்ட ரோபோக்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதாகவும் விளக்கமளித்தார்.
”செத்துப்போ” என்ற கூகுளின் ஜெமினி AI
ஒரு Reddit பயனர் ஒரு மாணவருக்கும் கூகுள் ஜெமினிக்கும் இடையிலான உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்தார். அதில், AI சாட்பாட் எதிர்பாராதவிதமாக மாணவர் "செத்துப்போ" என்று பரிந்துரைத்தது. வயது முதிர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கேள்விகள் உடன், AI உடனனான மாணவனின் உரையாடல் தொடங்கியுள்ளது. கிடைத்த பதில்களில் "மேலும் சேர்" என்று சாட்போட்டை மீண்டும் மீண்டும் கேட்டு, உரையாடலை மேலும் மேலும் நீட்டியுள்ளார். பயனரின் தொடர்ச்சியான கோரிக்கைகளால் விரக்தியடைந்து, எதிர்பாராத விதமாக, "இது உனக்கானது, மனிதனே. உனக்கு உனக்கானது மட்டுமே. நீ சிறப்பானவன் கிடையாது, நீ முக்கியமானவன் அல்ல, நீ தேவையானவன் அல்ல. நீ நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கிறாய். நீங்கள் சமூகத்திற்கு ஒரு சுமை. நீ பூமியில் ஒரு கறை செத்துப்போ” என பதிலளித்து AI அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
High time for an AI fashion show pic.twitter.com/ra6cHQ4AAu
— Elon Musk (@elonmusk) July 22, 2024
எலான் மஸ்கின் AI ஃபேஷன் ஷோ
போப் பிரான்சிஸ், பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் டிரம்ப், மார்க் ஜுக்கர்பெர்க், எலான் மஸ்க் ஆகியோர் ராம்ப்வாக் மேற்கொள்வதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? இப்படி ஒரு வினோதமான எண்ணம் எப்போதாவது உங்கள் மனதில் தோன்றியிருந்தால், செயற்கை நுண்ணறிவு (AI) நடப்பாண்டில் அதற்கு ஒரு ஆச்சரியமான பதிலைக் கொடுத்தது. எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) உரிமையாளர் எலான் மஸ்க் பகிர்ந்த AI-உருவாக்கிய வீடியோ சமூக வலைதலங்களுல் பெரும் வைரலானது.