LEO Special Show: 9 மணிக்கு தான் லியோ சிறப்புக்காட்சி தொடங்க வேண்டும்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
லியோ திரைப்படத்துக்கான முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்கப்பட வேண்டும். இறுதிக்காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
![LEO Special Show: 9 மணிக்கு தான் லியோ சிறப்புக்காட்சி தொடங்க வேண்டும்.. தமிழ்நாடு அரசு அதிரடி! LEO Special Show Tamil Nadu Government New Order All Theatres Screen Opening Show at 9 Am LEO Special Show: 9 மணிக்கு தான் லியோ சிறப்புக்காட்சி தொடங்க வேண்டும்.. தமிழ்நாடு அரசு அதிரடி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/13/f6bedf3c263fac92e2e391bac2430c141697198493116574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லியோ படத்துக்கு சிறப்புக்க்காட்சிக்கான அனுமதி நேற்று முன் தினம் வழங்கப்பட்ட நிலையில், சிறப்புக் காட்சிகளுக்கு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
9 மணி முதல் 1.30 மணி வரை
அதன்படி லியோ திரைப்படத்துக்கான முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்கப்பட வேண்டும். இறுதிக்காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அக்.19ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் 6 நாள்களுக்கு சிறப்புக்காட்சிகளுக்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது.
முன்னதாக லியோ திரைப்படம் வெளியாகி முதல் ஆறு நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலை 4 மணி அல்லது 7 மணி காட்சிகள் திரையிடப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதிக விலைக்கு டிக்கெட்? அதிரடி உத்தரவு
இச்சூழலில் இன்று தமிழ்நாடு உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், காலை 9 மணிக்கே முதல் சிறப்புக்காட்சி தொடங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஒரே ஒரு சிறப்புக்காட்சியை மட்டுமே திரையிட வேண்டும் என்றும், சினிமா திரையரங்குகளில் நிகழும் கட்டணம் தொடர்பான விதிமீறல்கள் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சினிமா திரையரங்குகில் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கவும், அதிக பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்க எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்புக்காட்சி ரத்துக்கு காரணம்
விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படங்கள் பொங்கல் வெளியீடாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகின. அப்போது துணிவு படத்தின் நள்ளிரவு ஒரு மணி சிறப்புக் காட்சியின் போது, சென்னை, ரோஹினி திரையரங்கின் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர் ஒருவர், லாரி மீதிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்காமல் இருந்து வந்தது. நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில், அப்படத்துக்கும் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. காலை 9 மணி காட்சிக்கே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லியோ பாடல்கள்
நேற்று முன் தினம் லியோ படத்தின் மூன்றாவது பாடலான அன்பெனும் பாடல் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது. ஏற்கெனவே இப்படத்தின் ‘நா ரெடிதான்’, 'Bad Ass' பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது.
மென்மையான குடும்பப்பாடலாக வெளியாகியிருக்கும் இப்பாடல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி பான் இந்தியா படமாக லியோ வெளியாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)