Mia Khalifa: மனிதநேயமே இல்லை - விவாகரத்துக்குப் பின் தொடர் கிண்டல்.. மனமுடைந்த மியா!
ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கும் மியா தற்போது ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர்களால் மன உளைச்சலுக்கே ஆளாகியுள்ளார்.
![Mia Khalifa: மனிதநேயமே இல்லை - விவாகரத்துக்குப் பின் தொடர் கிண்டல்.. மனமுடைந்த மியா! Mia Khalifa Forced To Block Loads Of People After Announcing She's Single Mia Khalifa: மனிதநேயமே இல்லை - விவாகரத்துக்குப் பின் தொடர் கிண்டல்.. மனமுடைந்த மியா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/28/3779f3dde81288d296f0775f0c253c7f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆபாச படங்களில் நடித்தது மூலம் பிரபலமானவர் மியா கலிபா. அடல்ட் பட நாயகி என்பது மட்டுமல்லாமல் உலகில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் இவர் குரல் கொடுப்பது மூலம் பலராலும் அறியப்பட்டார். டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மியா கருத்து தெரிவித்திருந்தார். இப்படியாக ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கும் மியா தற்போது ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர்களால் மன உளைச்சலுக்கே ஆளாகியுள்ளார். காரணம் அவரது விவாகரத்து பதிவு.
மியா கலிபா சமீபத்தின் தான் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார். கடந்த வருடம் மார்ச் மாதம் தான் சமையல் கலைஞரான ராபர்ட் என்பவருடன் மியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கொரோனா காரணமாக வீட்டிலேயே எளிமையாக திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரு வருடமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார் மியா.
இது தொடர்பாக வர் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதில் ''கடந்த ஒரு வருடமாக எங்களது உறவை தக்க வைத்துக்கொள்ள போதுமான முயற்சிகள் எடுத்தோம். ஆனால் பயனில்லை. அதனால் இப்போது திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். விவகாரத்து செய்பவர்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாம். அதற்கு பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள்'' என்றும் தெரிவித்திருந்தார். அவர் கேட்டுக்கொண்டது போலவே அவரது விவாகரத்து அறிவிப்புக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். பலர் கிண்டல் பதிவுகளையும் பதிவிட்டனர்.
இந்நிலையில் விவகாரத்து அறிவிப்புக்கு பின்னர் மியாவை பின் தொடரும் ரசிகர்கள் பலர், மியாவுக்கு மனம் வருந்தும் அளவுக்கு மெசேஜ் அனுப்புவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மியாவுக்கு ட்வீட் செய்துள்ள ஒருவர், மியா சிங்கிள் என்று அறிவிப்பு வெளியிட்ட பிறகு அவருக்கு அனுப்பப்பட்டிருக்கும் மெசேஜ்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள மியா, பிளாக் செய்து செய்து எனது ப்ளாக் பட்டனே சோர்வடைந்துவிட்டது. மனித நேயத்தின் மீது எனக்கு நம்பிக்கையே போய்விட்டது என பதிலளித்துள்ளார்.
எதிர்மறையான ஆட்களை கண்டுகொள்ளாமல், உங்களது வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணியுங்கள் என மியாவுக்கு ஆதரவாகவும் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.
லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா பள்ளி முடித்த கையோடு ஆபாச திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் 2011ல் பள்ளி காதலனை திருமணம் செய்துகொண்டார். 5 வருடங்கள் அவருடன் வாழ்க்கை நடத்திய மியா 2016ல் விவகாரத்து பெற்றுக்கொண்டார்.
My block button has never been exercised more. Zero faith in humanity remains. https://t.co/EB0442duAg
— Mia K. (@miakhalifa) July 24, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)