Most Tweeted Movie 2021: ட்விட்டர் டிரெண்டில் இரண்டு வருஷமும் ‘மாஸ்டர்’ டாப் ; ’பீஸ்ட்’ படத்துக்கு ஸ்பெஷல் டேக்!
மாஸ்டர் திரைப்படத்தின் ஹேஷ்டேக் தொடர்ந்து 2020, 2021 என அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளும் டாப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

2020-ம் ஆண்டின் கடைசி மாதம் வந்தாகிவிட்டது. இந்த ஆண்டு நடந்த வைரல் சம்பவங்களையும், அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்குகளையும் ட்விட்டர் ரிவ்யூவில் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இந்த ரிவ்யூவை ட்விட்டர் வெளியிடும்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பொழுதுபோக்கு சார்ந்த ரிவ்யூவை ட்விட்டர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில், 2021-ம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு சார்ந்த ஹேஷ்டேக் என்ற பிரிவில் முதல் ஐந்து இடங்களில் நான்கு தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளன. மாஸ்டர், வலிமை, பீஸ்ட், ஜெய் பீம், வக்கீல் சாப் என தென்னிந்திய திரைப்படங்கள் இந்த டாப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.
இதில், வலிமை, பீஸ்ட் இன்னும் வெளியாகத நிலையில், திரைக்கு வரும் முன்பே ரசிகர்கள் இடத்தில் அதிக எதிர்ப்பார்ப்பு இருப்பதை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டு விஜய் திரைப்படங்கள் இடம் பிடித்திருப்பதால் விஜய் ரசிகர்கள் அதே ஹேஷ்டேகை மீண்டும் பயன்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.
2021-ம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு சார்ந்த ஹேஷ்டேக்:
timelines were flooded with these hashtags throughout 2021 🔥 pic.twitter.com/uXUTNEYdIy
— Twitter India (@TwitterIndia) December 9, 2021
இந்த ஒரு பிரிவு மட்டுமின்றி, நெல்சக் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படம் மற்றுமொரு பிரிவில் டாப் இடம் பிடித்திருக்கிறது. 2021-ம் ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்டு, ரிட்வீட் செய்யப்பட்ட பொழுதுபொக்கு சார்ந்த பதிவாக பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இடம் பிடித்திருக்கிறது.
2021-ம் ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்டு, ரிட்வீட் செய்யப்பட்ட பொழுதுபொக்கு சார்ந்த பதிவு:
👏 most Liked and Retweeted in entertainment, 2021👇https://t.co/D2dgUIZYCc
— Twitter India (@TwitterIndia) December 9, 2021
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















