மேலும் அறிய
Advertisement
Actor Vishal: மார்க் ஆண்டனி படத்தால் வந்த வினை...”சிபிஐ விசாரணைக்கு செல்வேன் என எதிர்பார்க்கவில்லை” - விஷால் டிவீட்
Actor Vishal: ” சிபிஐ அலுவலகத்தில் விசாரணை எப்படி இருக்கும் என தெரிந்து கொண்டேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது” நடிகர் விஷால் டிவீட்.
Actor Vishal: மார்க் ஆண்டனி படம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜரானது புது அனுபவமாக உள்ளது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் அண்மையில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தியில் படத்தை திரையிட தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு விஷால் அணுகி இருந்தார்.
அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க இந்தி சென்சார் போர்டு தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்காக ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும் கூறிய விஷால், பணம் கொடுத்ததற்கான காசோலை உள்ளிட்ட ஆதாரங்களை வெளியிட்டார். விஷாலின் இந்த புகாரை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு முன்பை சென்சார் போர்டில் விசாரணையை தொடங்கியது.
விஷாலின் கோரிக்கையை என்று புகாரை பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் விஷாலிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, டிவிட்டரில் பதிவிட்ட விஷால், ” சிபிஐ அலுவலகத்தில் விசாரணை எப்படி இருக்கும் என தெரிந்து கொண்டேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இது போன்ற விசாரணைக்கு செல்வேன் என எதிர்பார்த்தது இல்லை. ரீல் வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் ரியல் வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன்” என கூறியுள்ளார்.
Just finished my visit to CBI office in Mumbai for an enquiry regarding the CBFC case. Was a complete new experience and am glad the way the enquiry is being conducted. Took some inputs too about how a CBI office would look like. Lol. Never ever thought in my life I will be going…
— Vishal (@VishalKOfficial) November 28, 2023
மேலும் படிக்க: Paruthiveeran: ”எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது படைப்பாளியை அவமதிக்கும் செயல்” - ஞானவேல்ராஜாவை கண்டித்த பாரதிராஜா!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion