மேலும் அறிய

Adhik Ravichandran: பிரபுவுக்கு மருமகனாகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்? அவர் இயக்கிய படங்களின் பட்டியல் இதோ... 

Adhik Ravichandran : தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாமா...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் தமிழ் சினிமாவின் பப்ளி நடிகருமான பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஏற்கனவே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் வேளையில் அவரின் மகள் ஐஸ்வர்யா பிரபு தனது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். 

இந்த நிலையில் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, தமிழ் சினிமாவின் இளம் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்தரனுக்கும் வரும் டிசம்பர் 15ம் தேதி திருமணம் என்றும் அதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வெளியாகவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Adhik Ravichandran: பிரபுவுக்கு மருமகனாகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்? அவர் இயக்கிய படங்களின் பட்டியல் இதோ... 

நடிகர் அஜித் நடிக்கும் AK63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தமிழில்  வெளியான படங்களின் பட்டியலை பார்க்கலாம் :

திரிஷா இல்லனா நயன்தாரா  :

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், கயல் அனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் 2015ம் ஆண்டு  வெளியான இப்படம் ஆபாச வார்த்தைகள் நிரம்பிய அடல்ட் காமெடி திரைப்படம். இன்றைய இளைஞர்களின் காதல் கதையை சொல்கிறோம் என்ற கண்ணோட்டத்தில் படு கேவலமாக சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் மோசமான படமாக இருந்தது. படம் முழுக்க முருங்கைக்காய் சிப்ஸ் வசனங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்து. இப்படத்திற்கு எப்படி தணிக்கை குழு 'U' சான்றிதழ் வழங்கியது என்ற கமெண்ட்கள் எழுந்தன. 

அன்பானவன் அசரதவன் அடங்காதவன் :

நடிகர் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில்  யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 2017ம் ஆண்டு வெளியான இப்படமும் ஒரு மாதிரியான படமாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.   

வெர்ஜின் மாப்பிள்ளை :

மீண்டும் ஜி.வி.பிரகாஷ் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான கிளுகிளுப்பான படம் தான் வெர்ஜின் மாப்பிள்ளை. ஏற்கனவே வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தால் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இப்படத்தின் டைட்டிலே சர்ச்சையில் சிக்கியது. 

பஹீரா :

பிரபுதேவா நடிப்பில் சைக்கோ திரில்லர் ஜானரில் 2023ம் ஆண்டு வெளியான பஹீரா திரைப்படம் காதல் என்ற பெயரில் பெண்கள் ஆண்களை ஏமாற்றும் மோசமானவர்கள் பெண்கள் என பெண்களுக்கு எதிரான தாக்குதலை படமாக்கி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். 

மார்க் ஆண்டனி :

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மார்க் ஆண்டனி. அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதையில் ஒரு டைம் ட்ராவல் கான்செப்டை வைத்து வெளியான முதல் படம் இது தான். காமெடி, ஆக்ஷன் கலவையில் வெளியான இந்த என்டர்டைனர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Super She Island : இளம் பெண்களுக்காக மட்டுமே ஒரு தனி தீவு.! ஆண்களுக்கு நோ என்ட்ரி- அப்படி என்ன ரகசியம் இருக்கு.?
இளம் பெண்களுக்காக மட்டுமே ஒரு தனி தீவு.! ஆண்களுக்கு நோ என்ட்ரி- அப்படி என்ன ரகசியம் அங்கு இருக்கு.?
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Tata Offers: ரூ.85 ஆயிரம் வரை ஆஃபர்... Altroz டூ Punch... டாடா தந்த அருமையான தள்ளுபடி!
Tata Offers: ரூ.85 ஆயிரம் வரை ஆஃபர்... Altroz டூ Punch... டாடா தந்த அருமையான தள்ளுபடி!
Embed widget