![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: ”தப்பான முடிவெடுத்துட்டேன்னு சொன்னாங்க” : கண்ணீருடன் ஹுசைனை பற்றி மனம் திறந்த மணிமேகலை..
ஒரு எட்டு மாத காதல்ல ரொம்ப அவசரமா கல்யாணம் செஞ்சு இந்த அளவுக்கு சிறந்த ஜோடி எனக்கு கெடைப்பாருன்னு நான் நினைக்கவே இல்ல
![Watch Video: ”தப்பான முடிவெடுத்துட்டேன்னு சொன்னாங்க” : கண்ணீருடன் ஹுசைனை பற்றி மனம் திறந்த மணிமேகலை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/01/ba8feac8e43a55079be1533c0792f3cd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் மியூசிக் சேனலில் VJ-வாக அறிமுகமாகி பட்டிதொட்டியெல்லாம் பாப்புலர் ஆனவர் விஜே மணிமேகலை. தனது படபடப்பு மற்றும் கலகலப்பான பேச்சின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்ற இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளையும் பேட்டி கண்டும் அசத்தி இருக்கிறார். சன் நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடந்த 2019-ல் பிரபல முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவிக்கு மாறினார்.
விஜய் டிவி-யில் முதலில் சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்ட மணிமேகலை, பின்னர் ஷோக்களை தொகுத்து வழங்க துவங்கினார். குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் ரசிகர் பட்டாளம் பல மடங்கு உயர்ந்தது. தமிழ் சின்னத்திரை உலகில் பெரிய ஹிட் அடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் அனைவரும் எதிர்ப்பார்த்ததுபோல வெற்றிகரமாக துவங்கி மீண்டும் ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் கோமாளியாக கலக்கிக்கொண்டிருக்கிறார் மணிமேகலை.
கடந்த 2017ம் ஆண்டு உதவி நடன இயக்குனரான ஹுசைனை திருமணம் செய்துகொண்டார். ஹுசைனை அவர் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரை கரம் பிடித்தார். இருவரும் இன்றுவரை தனித்து வாழ்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை தனது காதல் கணவர் ஹுசைனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி பதிவிடுவார். இந்த ஜோடி கடந்த ஆண்டு அடுத்தடுத்து இரண்டு கார்கள் வாங்கி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. ஹுசைன் மணிமேகலை யூடியூப் சேனலுக்கு கிடைத்த வரவேற்பு, அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்தியுள்ளது. அதன் விளைவாக தன் கனவு காரான BMW சொகுசு காரை வாங்கினார். எப்போதும் சிரிப்புடன், ரசிகர்களை சிரிக்க வைக்கும் மணிமேகலை, அழுது மிகவும் எமோஷனலாக பேசும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
View this post on Instagram
ஒரு அவார்டு நிகழ்ச்சியின் மேடையில் இந்த ஜோடி நின்றபோது, மணிமேகலை ஹுஸைனை பற்றி பேசி கண்ணீர் விட்டார். அவர் பேசுகையில், "எனக்கு ரொம்ப நெருக்கமானவர்களே 'நீ எடுக்குற முடிவு தப்பு'ன்னு சொன்னாங்க… அப்போ நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், ஆனா அப்போ எனக்குள்ள ஒன்னு இருக்கும், நான் எடுத்த முடிவு சரி தான், அது சரியாதான் இருக்கணும் ன்னு நெனச்சேன். அதை சரின்னு உறுதிசெய்ய இன்னைக்கு வரைக்கும் நீ சப்போர்டிவா இருக்க... ஒரு எட்டு மாத காதல்ல ரொம்ப அவசரமா கல்யாணம் செஞ்சு இந்த அளவுக்கு சிறந்த ஜோடி எனக்கு கெடைப்பாருன்னு நான் நினைக்கவே இல்ல." என்று கூறி மீண்டும் கண்ணீர் சிந்தினார் மணிமேகலை. ஹுசைன் அவரை அனைத்து சமாதானப்படுத்த, அந்த அரங்கம் உணர்ச்சிகளால் உறைந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)