இது மஞ்சு வாரியரின் ’அரபிக் குத்து’.. பிரபுதேவா மேனியாவும்.. ட்ரெண்டாகும் பாட்டும்..
அரபிக் குத்து பாடலைப் போல் இந்தப் பாடலிலும் அரேபிய பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பிரபுதேவா ஜாலியாக மஞ்சு வாரியருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் காட்சிகள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளன.
நடிகர் திலீப் உடனான விவாகரத்துக்குப் பிறகு மலையாள சினிமாவின் ’36 வயதினிலே’ படம் மூலம் கம் பேக்கும், தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து இளம் நடிகைகளுக்கு இணையாக மாஸ் காட்டி வருகிறார் மஞ்சு வாரியர்.
அசுரன், அஜித்தின் 61ஆவது படம் என தமிழிலும் வெற்றிப் பயணத்தைத் தொடங்கியுள்ள மஞ்சு வாரியர் தற்போது ஆயிஷா எனும் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கன்னிலு கன்னிலு’ எனும் பாடலுக்கு பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா கொரியாகிராஃப் செய்துள்ள நிலையில், முன்னதாக இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பலத்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
View this post on Instagram
நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பாடலைப் போல் இந்தப் பாடலிலும் அரேபிய பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பிரபுதேவாவின் துள்ளலான நடனம் அமைக்கும் முறையும், மஞ்சு வாரியருக்கு ஜாலியாக நடனம் கற்றுக் கொடுக்கும் காட்சிகளும் மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
மஞ்சு வாரியர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் பதிவிடும் புகைப்படங்கள்மற்றும் வீடியோக்கள் முற்றிலும் வித்தியாசமானதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கின்றன. என்னதான் நடிகைகள் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வது இயல்பான ஒன்றாக இருந்தாலும் மஞ்சு வாரியர் தனது புன்னகைக்குள் சில பாசிட்டிவ் மேஜிக்கை ஒளித்து வைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார்.