Manjima Gautam karthik : ஓஹோ அப்படியா விஷயம்..6 ஆண்டுகளுக்கு முன்பே காதலிக்க தொடங்கிய மஞ்சிமா- கெளதம் கார்த்திக்!
கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனுக்கும் திருமணம் ஆகிய நிலையில், இவர்களை பற்றி சுவாரஸ்யமான ஒரு விஷயம் இணையத்தை கலக்கி வருகிறது.
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் நேற்று நெருங்கிய உறவுகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தேவராட்டம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர் என்று கூறப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த ஜோடி தங்களது காதலை சமூக வலைதளத்தில் அறிவித்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் இருவரும் கரம்பிடித்தனர். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்திருந்தகெளதம் கார்த்திக்கும் வெள்ளை புடவை அணிந்த மஞ்சிமா மோகனும் அழகாக இருந்தனர்.அவர்களின் திருமண புகைப்படமும் வெளியாகி செம வைரலானது.
View this post on Instagram
தற்போது கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனுக்கும் திருமணம் ஆகிய நிலையில், இவர்களை பற்றி சுவாரஸ்யமான ஒரு விஷயம் இணையத்தை கலக்கி வருகிறது. இவர்கள் இருவரும், மூன்று ஆண்டுக்கு முன் வந்த தேவராட்டம் படத்திலிருந்துதான் காதலித்து வருகின்றனர் என்று நினைத்து வருகின்றனர். ஆனால், சிம்புவுடன் மஞ்சிமா நடித்த “அச்சம் என்பது மடமையடா” படத்தில் வரும் பறக்கும் ராசாலியே ராசாலியே என்ற பாடல் இடம் பெற்று இருக்கும்.
அதில், சிம்பு-மஞ்சிமா இருவரும் ஒரு வீட்டில் தங்குவர். அப்போது அங்கு இருக்கும் டிவி முதலில் வேலை செய்யாது. பின்னர், அதை ரெண்டு தட்டு தட்டி கேபிள் ஒயரை முறுக்கிய உடன் கெளதம் கார்த்திக் நடித்த கடல் படத்தின் சீன் ஒன்று அந்த டி.வியில் வரும்.
இப்போது அந்த காட்சியை வைத்து நெட்டிசன்கள், “ஒரு வேல இருக்குமோ...”, “ஓஹோ அப்போவே அப்படி”, “அன்றே கணிக்கப்பட்டது” என்று கலர் கலராக கலாய்த்து வருகின்றனர். இதைப்பார்க்கும் போது, தேவராட்டம் படத்திற்கு முன்பே காதலிக்க தொடங்கிவிட்டனரா என்ற கேள்வி தோன்றுகிறது. இல்லையென்றால் அது தற்செயலாக அமைந்ததா என்பது விளங்கவில்லை. ஆனால், இதுதான் பக்காவான கப்பூள் கோல்ஸ்..!
இந்த புதுவிதமான கேள்விக்கு கோலிவுட்டின் க்யூட் ஜோடியான அவர்களே பதில் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க : Jai Bhim 2 : “கண்டிப்பாக ஜெய்பீம் 2; கதைக்களம் இப்படித்தான் இருக்கும்” - இணைத் தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!