Actress Aparna P Nair: பிரபல மலையாள நடிகை மர்ம மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை..
பிரபல மலையாள நடிகை அபர்ணா பி நாயர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகை அபர்ணா பி நாயர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 'சந்தனமழை', 'ஆத்மசகி', 'மைதிலி விரும்பும் வரும்' மற்றும் 'தேவஸ்பர்ஷம்' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் 'மேகதீர்த்தம்', 'முத்துகௌ', 'அச்சாயன்ஸ்', 'கோடாதி சமக்ஷம் பாலன் வக்கீல்', 'கல்கி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அபர்ணாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் அவர், அடிக்கடி தன் குடும்பத்தினரின் புகைப்படங்களையும், ரீல்ஸ்களையும் வெளியிடுவது வழக்கம்.
இதனிடையே திருவனந்தபுரம் கரமனாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 31) மாலை 6 மணியளவில் அபர்ணா தனது தாய்க்கு போன் செய்துள்ளார். வீட்டில் சில பிரச்சினைகள் நிகழ்ந்ததால் அழுதுக்கொண்டே போனை வைத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இரவு 7 மணியளவில் அபர்ணா பி நாயர் மயங்கிய நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர் கிள்ளிபாலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அபர்ணா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 வயதான அபர்ணாவின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேச பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அபர்ணாவின் மரணம் தொடர்பான விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இளம் நடிகை ஒருவரின் மரணம் கேரள திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.