Shiyas Kareem: பாலியல் புகாரில் சிக்கிய பிக்பாஸ் நடிகர்.. சென்னை விமான நிலையத்தில் அதிரடி கைது..!
பிரபல மாடலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவருமான ரியாஸ் கரீம் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல மாடலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவருமான ரியாஸ் கரீம் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஷியாஸ் கரீம் மீது கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள படன்னா பகுதியைச் சேர்ந்த 32 வயது ஜிம் ட்ரெயினர் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதில் எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் ஷியாஸ், ஜிம் பயிற்சியாளர் பணிக்கான காலியிடங்கள் குறித்து விளம்பரம் ஒன்றை கொடுத்திருந்தார். அதனைப் பார்த்த நான் அவரை சந்தித்தேன். ஆரம்பத்தில் நண்பர்களாக சென்ற உறவு ஒருகட்டத்தில் இன்னும் நெருக்கமாக தொடங்கியது. தனது ஜிம்மில் பார்ட்னர்ஷிப் தருவதாக உறுதியளித்து என்னிடம் ரூ.11 லட்சம் பண மோசடி செய்தார்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் வரை என்னுடன் உறவில் இருந்த அவர், திருமணம் செய்வதாக உறுதியளித்து ஷியாஸ் கரீம் என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கருவுற்ற என்னை பலமுறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷியாஸ் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அப்பெண் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஷியாஸ் கரீம் மீது பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல், கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புகார் தெரிவித்த பெண்ணுக்கு கன்ஹாங்காட்டில் உள்ள மாவட்ட அரசு மருத்துமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஹோஸ்துர்க்கில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டது. தன் மீது புகார் அளிக்கப்பட்ட விஷயம் தெரிந்ததும் ஷியாஸ் கரீம் தலைமறைவானார். இதனிடையே இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து ஷியாஸ் கரீம் வருகை தந்தார். ஏற்கனவே அவரை பிடிக்க கேரள காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இதனால் சென்னை வந்த ஷியாஸ் சுங்கத்துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவரை கேரள போலீசாரிடம் விரைவில் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷியாஸ் கரீம் மலையாளத்தில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் உள்ளே நுழைந்தார் ஷியாஸ் கரீம். பாடிபில்டரான அவருக்கு அந்நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: BiggBoss 7 Tamil Promo: ‘இன்னைக்கு கலவரம் கன்ஃபார்ம்” .. பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.. அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்..!