மேலும் அறிய

Mohanlal: 'தேவதைகளின் ஆசிர்வாதம்..' குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய மோகன்லால்...!

மலையாளத் திரைப்பட நடிகர் மோகன்லாலுக்கு இன்று 63வது பிறந்தநாள். தனது பிறந்த நாளை குழந்தைகளுடன் கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மோகன்லால்.

மலையாளத் திரைபபட நடிகர் மோகன்லால் இன்று தனது 63 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். வழக்கமான முறையில் இல்லாமல் குழந்தைகளுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் மோகன்லால். மேலும்  இந்த புகைபடங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அவர். அவரது இந்த முயற்சிக்காக திரைக்கலைஞர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

மோகன்லால் பிறந்தநாள்:

மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் எனப்படும் மோகன்லால் இன்று தனது 63 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திரையுலக பிரபலங்கள அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பெரிய அளவிலான கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் மிக எளிமையான ஒரு முறையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் மோகன்லால்.

கேரளாவில் இருக்கும் ஹம் என்கிற அமைப்பு நடத்தி வரும் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுடன் எளிமையாக கேக் வெட்டி அவர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமூகத்தில்  பின் தங்கிய பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக நடத்தப்படும் இந்த அமைப்பிற்கு தொடர்ச்சியாக தனது ஆதரவை தெரிவித்து வருகிறார். கடந்த ஆண்டும் தனது  பொருளாதாரத்தில் பின் தங்கிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த  20 குழந்தைகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடியது குறிப்பிடத் தக்கது.

தேவதைகளின் ஆசிர்வாதம்:

இந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த மோகன்லால் “இந்த அழகான தேவதைகளின் ஆசியுடன்  எனது பிறந்தநாளை முடித்துக்கொண்டேன் “ என பதிவிட்டிருக்கிறார். டோவினோ தாமஸ் நைலா உஷா ஆகிய மலையாள நடிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள். மற்றுமொரு சிறப்பான நிகழ்வு என்னவென்றால் மோகன்லாலுக்கு நடிகர் மம்மூட்டியின் வாழ்த்து. தனது ட்விட்டர் பக்கத்தில் மம்மூட்டியும் மோகன்லாலும் சேர்ந்து நிற்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து தனது வாழ்த்துக்களைத் பகிர்ந்துள்ளார் மம்மூட்டி.

மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழிலும் மோகன்லாலுக்கு ஒரு நல்ல ரசிகர் கூட்டம் இருக்கிறது. இருவர், உன்னைப்போல் ஒருவன் , காப்பான், ஜில்லா, ஆகியத் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மோகன்லால் தற்போது சூப்பர்ஸ்டார் நடித்திருக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து  நடிகர் ப்ரித்விராஜ் இயக்க இருக்கும் லூசிஃபர் திரைப்படத்தின் நடிக்க இருக்கிறார் மோகன்லால்.

மேலும் ஜீத்து ஜோசஃப் இயக்கும் த்ரிஷ்யம் படத்தின் 3 ஆவது பாகம் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கும் படம் மற்றும்  சுகுமாரன் இயக்கி அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அவர். ஜெயிலர் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் குறிபிடத்தகுந்த ஒரு கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget