Dhyan Sreenivasan : சினிமா எனக்கு மறு வாழ்க்கை கொடுத்தது... தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையான ஜெயிலர் நடிகர்.
மலயாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் தான் போதை பழக்கத்தில் இருந்து சினிமா தன்னை மீட்டேடுத்ததாக கூறியுள்ளார்
தீவிர போதைப் பழக்கத்திற்கு தான் அடிமையாக இருந்ததாக மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியான் ஸ்ரீனிவாசன்
தமிழி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகிய அதே நேரத்தில் மலையாளத்தில் ஜெயிலர் என்கிறத் திரைப்படம் வெளியானது . மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிடத் தகுந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் தியான் ஸ்ரீனிவாசன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தியான் தனது தீவிர போதைப் பழக்கம் குறித்து பேசினார். தன்னைப் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிந்தார் அவர்.
என் பெற்றோர்கள் என்னை கைவிட்டார்கள்
தனது கல்லூரி காலங்களில் தான் தீவிரமாக மது அருந்தும் பழக்கம் மற்றும் மற்ற போதை பொருட்களை உபயோகித்து வந்ததாக கூறினார் தியான். தனது இந்தப் பழக்கம் தன்னுடைய வாழ்க்கையின் மிக அழகான காலக்கட்டத்தை நாசமாக்கியதாகவும் தனது நண்பர்கள் மற்றும் பிற உறவுகளை இதனால் தான் இழந்ததாகவும் அவர் கூறினார். மேலும் பல நேரங்களில் தனது தந்தையிடம் மரியாதைக் குறைவாக தான் நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார். தன்னுடைய இந்த செயலைப்பற்றி தெரிந்துகொள்ளும் அளவிற்கு கூட தான் சுயநினைவில் இல்லையென்றும் தனது டிரைவர் மூலமாக இந்த தகவலை தான் தெரிந்துகொண்தாக அவர் கூறினார். இந்த போதை பழக்கத்தில் இருந்து தான் மீண்டு வருவேன் என்கிற நம்பிக்கையை தனது பெற்றோர்கள் இழந்துவிட்டதாகவும் தனது மனைவி மற்றும் தனது மகளின் வருகை தன்னை இந்தப் பழக்கங்களில் இருந்து வெளிவர உதவி செய்ததாக அவர் தெரிவித்தார்.
சினிமாதான் எனக்கு மறுவாழ்வு
கடந்த சில ஆண்டுகளாக போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட்டிருக்கும் தியான் தன்னை இந்தப் பழக்கத்தை கைவிடச் செய்த மற்றொரு முக்கியமான காரணமான சினிமாவை கூறுகிறார். ’ என்னுடைய கரியரை நான் இழக்க நேரும் என்று தெரிந்தபோது நான் என்னுடைய போதைப் பழக்கத்தை கைவிட்டேன். சினிமா தான் எனக்கு இப்போது மறுவாழ்வு மையம் மாதிரி” என்று தியான் கூறியுள்ளார்.
நடித்து வரும் படங்கள்
தற்போது தியான்ச் ஸ்ரீனிவாசன் தான் நடித்திருக்கும் நதிகளில் சுந்தரி யமுனா படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து விஜேஷ் பனதூர் மற்றும் உன்னி வெள்ளோரா உள்ளிட்டப் படங்களிலும் நடித்துள்ளார் தியான். வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படம்