SSMB 28: புதிய தோற்றத்தில் மகேஷ்பாபு.. கெத்தாக ரீலிஸ் தேதியை அறிவித்த SSMB28 படக்குழு..!
SSMB 28 release date: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள SSMB28 திரைப்படம், அடுத்த வருடம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் படம் SSMB28. இப்படத்தினை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த வருடம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமை காட்டும் மகேஷ் பாபு!
தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு, நடிகர் மகேஷ் பாபு நடித்து வரும் படம் SSMB28. இப்படத்தினை பிரபல இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிவருகிறார். தெலுங்கில் வெற்றி இயக்குனர் என புகழப்படும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மற்றும் வெற்றி நாயகன் மகேஷ் பாபு ஆகியோரின் கூட்டணியில் இப்படம் ப்ளாக் பஸ்டர் அளவில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கதைக்களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் என தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இதுவரையில் காணாத வகையில் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி திரையில் கொண்டு வந்துள்ளார். இதனிடையே ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் தயாரிப்பாளர்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். SSMB28 படத்தின் வெளியீட்டு தேதியை, மகேஷ் பாபுவின் கதாப்பாத்திர லுக்குடன் கூடிய ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர்.
The Reigning Superstar @urstrulymahesh in an all new MASS avatar is all set to meet you with #SSMB28 in theatres from 13th January 2024 worldwide! 🤩#SSMB28FromJAN13 🎬🍿#Trivikram @hegdepooja @sreeleela14 @MusicThaman @vamsi84 #PSVinod @NavinNooli #ASPrakash @haarikahassine pic.twitter.com/qqXjnJphqH
— Haarika & Hassine Creations (@haarikahassine) March 26, 2023
ரிலீஸ் தேதி வெளியீடு:
இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும், #SSMB28 திரைப்படம் ஜனவரி 13, 2023 அன்று சங்கராந்தி (பொங்கல்) விழாக்கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரில் மகேஷ் பாபு ஸ்டைலான தோற்றம் மற்றும் லேசான தாடியுடன் க்ளாஸ் லுக்கில், சிகரெட் புகைத்து கொண்டு சாலையில் நேர்த்தியாக நடந்து செல்கிறார், மேலும் போஸ்டரில் அடியாட்கள் அவரை வணங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படப்பிடிப்பு பணிகள்:
டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தைத் தயாரிக்கிறார். குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்ஷன் கலந்த இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் முன்னணி நட்சத்திரங்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
SSMB28 படத்தை தேசிய விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நவின் நூலி எடிட்டிங் செய்கிறார், கலை இயக்குநராக ஏ.எஸ்.பிரகாஷ், இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் S தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக PS வினோத் ஆகியோர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.