‘GOAT நீ நெனச்சாலும் அமையாது Kingmaker da' - விஜய் அரசியலுக்கு சென்றாலும் வம்பிழுக்கும் அஜித் ரசிகர்கள்
இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் விடாமுயற்சியில் கிடைத்த மாபெரும் வெற்றி CONGRATS TEAM INDIA என்ற வசனங்களுடன் அச்சிட்டு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மதுரை அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விரைவில் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது படமான இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து மங்காத்தா வெற்றிப்படமாக ஓடிய மங்காத்தா படத்தின் 13 -வது ஆண்டு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அஜித் ரசிகர்கள் மதுரை மாநகரம் பகுதிகள் முழுவதிலும் பல்வேறு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில் BLOCKBUSTER HITலாம் GOAT நீ நெனச்சாலும் அமையாது Kingmaker டா என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
- Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் போஸ்டர்
விஜய் அரசியல் கட்சியை தொடங்கி அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா Vs COAT என மீண்டும் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் வகையில் நோட்டீஸ் ஒட்டிவருகின்றனர். இதனிடையே உலக கோப்பையில் இந்தியா வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையிலும் விடாமுயற்சியில் கிடைத்த மாபெரும் வெற்றி CONGRATS TEAM INDIA என்ற வசனங்களுடன் அச்சிட்டு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sam Pitroda:இந்தியர் குறித்து சர்ச்சையான கருத்து: ராஜினாமா செய்த காங்கிரஸ் அயலக தலைவர் சாம் மீண்டும் நியமனம்!