Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
பிரபாஸ் நடித்து நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியுள்ள கல்கி படம் மூன்றே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது.

கல்கி 2898 ஏடி
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்துள்ள இப்படம் உலகளவில் முதல் நாளில் 191 கோடி வசூலித்தது. தற்போது படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். இதன்படி கல்கி படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் 415 கோடி வசூலித்துள்ளது. மொத்தம் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மூன்றே நாட்களில் படத்தின் பெரும்பாலான செலவை திருப்பி எடுத்துள்ளது.
The force is unstoppable…❤️🔥#Kalki2898AD #EpicBlockbusterKalki @SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth pic.twitter.com/fjhnE8KWIB
— Kalki 2898 AD (@Kalki2898AD) June 30, 2024
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

