VETTAIYAN Audio Launch: ரஜினியின் வேட்டையன் ஃபீவர் ஸ்டார்ட் - இசை வெளியீட்டு தேதியை அறிவித்தது லைகா..!
VETTAIYAN Audio Launch: ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின், இசைவெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது
VETTAIYAN Audio Launch: ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின், இசைவெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
வேட்டையன் இசைவெளியீட்டு விழா தேதி அறிவிப்பு:
லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் செப்டம்பர் 20ம் தேதி மாலை 6 மணியளவில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், வேட்டையன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி, வேட்டையன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
Mark your calendars! 🗓️ The VETTAIYAN 🕶️ Audio & Prevue event is happening on Sept 20 at 📍 Nehru Stadium, 6 PM onwards. Get set for a star-studded evening! 🤩#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan… pic.twitter.com/42S3LQdNed
— Lyca Productions (@LycaProductions) September 16, 2024
எதிர்பார்ப்பை தூண்டியுள்ள வேட்டையன் திரைப்படம்:
ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த, ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ரானா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் இருந்து ஏற்கனவே மனசிலாயோ எனும் பாடம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான், வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 20ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்டையன் கதைக்களம் என்ன?
வேட்டையயன் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் திருவனந்தபுரம் , தமிழ்நாட்டில் திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 140 நாகளுக்கும் அதிகமாக நடைபெற்றது. ஜெய் பீம் திரைப்படம் பட்டியிலின மக்கள் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகள் தொடர்பாக ஆழமாக பேசியிருந்தது. இந்நிலையில், வேட்டையன் திரைப்படம், கல்வி பயிற்சி மையங்களை சுற்றி நடைபெறும் ஊழலை பற்றி பேசும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிப்பதை, ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதைதொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும், கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அதிலும் சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பெரும் நடிகர் பட்டாளமே இடம்பெற்றுள்ளது.