லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் நான் ரெடிதான் பாடலில் ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு பேட்டா கொடுக்காமல் தினேஷ் மாஸ்டர் ரூ 35 லட்சம் கையாடல் செய்துள்ளது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது

நடன இயக்குநர் ராஜூ சுந்தரமின் நடனக் குழுவில் பணியாற்றியவர் தினேஷ் மாஸ்டர். 2001 ஆம் ஆண்டு மனதை திருடிவிட்டாய் படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார். கடந்த 25 ஆண்டுகளில் ரஜினி , விஜய் என 100 படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கி கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ படத்தில் நடன இயக்குநராக பணியாற்றினார். தற்போது நடன இயக்குநர் சங்கத்தின் தலைவர் பொறுப்பையும் நிர்வகித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடல் படத்தில் பிரம்மாண்டமாக உருவானது. இந்த பாடலில் மொத்தம் 1000 டான்ஸர்களை ஆடவைத்ததாக கூறி நடனமாடியவர்களுக்கு பேட்டா கொடுக்காமல் தினேஷ் மாஸ்டர் ரூ 35 லட்சம் மோசடி செய்துள்ளதாக அவர் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். இதனை தினேஷ் மாஸ்டரிடம் கேட்ட ஜூனியர் நடனக் கலைஞரை தினேஷ் மாஸ்டர் மற்று நடன சங்க நிர்வாகிகள் அடித்த சிசிடிவி வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
🚨 #LeoMovie scandal explodes! Dinesh Master DIDN’T PAY dancers for their hard work in the “Naa Ready Dhaan” song. 😡 Pure exploitation — let’s call out this injustice and demand accountability!#Chennai | #DanceMaster | #Issue | #LeoScam | #FraudAlertpic.twitter.com/4qVhqxLl7C
— MsTom Prem (@Mstomprem) June 3, 2025





















