5 Years Of Merku Thodarchi Malai : மண்ணும் மனிதரும்.. 5 ஆண்டுகளை நிறைவுசெய்யும் மேற்குத் தொடர்ச்சி மலை
லெனின் பாரதி இயக்கிய மேற்கு தொடர்ச்சி மலை வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன
இயக்குநர் லெனின் பாரதி இயக்கி விஜய் சேதுபதி தயாரிப்பில் கடந்த 2018-ஆம் வருடம் வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலை
மண் சார்ந்த படைப்புகள் , மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக பேச வேண்டிய படைப்புகள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாக வேண்டும் என்கிற கோரிக்கை வெகு நாட்களாக இருந்துவருவது தான். ராட்சசத்தனமான செலவில் வெளியாகும் படங்களில் மண் சார்ந்த கதைகளை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? வெகு சில இயக்குநர்கள் மட்டுமே குறைந்த செலவில் உண்மைக்கு நெருக்கமான படைப்புகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்தப் படங்கள் முக்கியமாக தவறவிடுவது கதைகளை அல்ல நிலங்களை..
நிலத்தின் அழகு
மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் மக்களுக்கான அரசியலை அவர்களின் வாழ்க்கையை சாராம்சப்படுத்தும்போது காட்சி ரீதியான அழகியலை எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு நிலத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மனிதர்களின் வழியாக அந்த நிலத்திற்கு ஒரு சிறிய பயணம் சென்று வந்த அனுபவத்தை இந்தப் படம் அளிக்கிறது.
சினிமா என்பது பூதமல்ல
மேலும் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு என்ன? ஒரு சினிமா எடுப்பதற்கு ஆடம்பரங்கள் இல்லாமல் ஒரு நல்ல கதையை அதன் தன்மை மாறாமல் சொல்வது எவ்வளவு முக்கியம் என்று சொன்னதுதான்..
சின்ன குறை
முழுக்க முழுக்க ஊர்மக்களை மட்டுமே வைத்து நடிக்க வைக்கப்பட்ட இந்தப் படத்தின் மிகப்பெரிய குறை மிக உணர்வுப்பூர்வமான இடங்களை கடத்துவதற்கு தேர்ந்த நடிகர்கள் இல்லாமல் இருந்ததே.