மேலும் அறிய

Director Marimuthu: இயக்குநர் மாரிமுத்து உடல் இன்று அடக்கம்.. சொந்த ஊரில் அஞ்சலி செலுத்த குவிந்த பொதுமக்கள்..!

பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற உள்ளது.

ரசிகர்களிடையே பிரபலமான மாரிமுத்து 

தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் மாரிமுத்து. சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த அவர் கிடைக்கும் வேலைகளை செய்து 1980 ஆம் ஆண்டின் பிற்பகுதி காலக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து  நடிகர் ராஜ்கிரண், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட  இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் மூலம் பல படங்களில் பணியாற்றிய மாரிமுத்து சிலம்பரசன் நடித்த மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியனார்.

அவர்,  நடிகர் பிரசன்னா நடித்த ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநரானார்.  தொடர்ந்து புலிவால் படத்தை இயக்கிய மாரிமுத்து, தொடக்கத்தில் இருந்தே சில படங்களில் நடிக்கவும் செய்திருந்தார். அவரை முழுநேர நடிகராக இயக்குநர் மிஷ்கின் யுத்தம் செய் படத்தில் நடிக்க வைத்தார். இதன்பின்னர்  முழுநேர நடிகராக மாறிய மாரிமுத்து ரஜினி, கமல், விஜய், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். 

எதிர்நீச்சல்:

ஆனால் மாரிமுத்துவை பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைய செய்தது என்னவோ சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியல் தான். இதில் ஆதி குணசேகரனாக எண்ட்ரீ கொடுத்த அவர், தான் இல்லை என்றால் அந்த சீரியலே இல்லை என்னும் அளவுக்கு மிரட்டியிருந்தார். கிட்டதட்ட 500 எபிசோட்களை கடந்த எதிர்நீச்சல் சீரியலுக்காக பல தரப்பட்ட ரசிகர்களை பெற்றார். அவர் பேசும் ஒவ்வொரு தக் லைஃப் வசனங்களும் சமூக வலைத்தளத்தில் பிரபலமானது. 

மாரடைப்பால் மரணம் 

சின்னத்திரை, வெள்ளித்திரை என பிஸியாக நடித்து வந்த மாரிமுத்து, நேற்று (செப்டம்பர் 8)   ‘எதிர் நீச்சல்’ சீரியல்  டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து திடீரென தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் ஸ்டூடியோவில் இருந்து பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தானே கார் ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மாரிமுத்து மாரடைப்பு  காரணமாக இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலக பிரபலங்கள், ரசிகர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைவரும் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இப்படியான நிலையில் மாரிமுத்து உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள பசுமலைத்தேரி கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாரிமுத்து மறைவு செய்தியால் சொந்த ஊர் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சுற்றுவட்டார மக்கள் குவிந்து வருகின்றனர்.இன்று காலை 10.30 மணியளவில் மாரிமுத்து உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று அடக்கம் செய்யப்படும் என அவரது மகன் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget