''எனக்கு பாய் ஃபிரண்டா இருக்கணும்னா.. ஒரே ரூல்தான்..'' லக்ஷ்மி மேனன் சொன்ன அந்த விஷயம்!
"" எனக்கு ஒரு பாய் ஃபிரண்டா இருக்கனும்னா சிம்பிளா இருக்கனும் ரொம்ப டவுன் டு எர்த்தா இருக்கனும்,"
தமிழில் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் லக்ஷ்மி மேனன் . பார்ப்பதற்கு மெச்சூர்ட் லுக்கில் இருந்தாலும் பள்ளி பருவத்திலேயே நடிக்க வந்தவர். சமீபத்தில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கா சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. வெளி நாட்டில் கல்லூரி படிப்பை தொடருவதாக கூறப்படுகிறது. அவ்வபோது மேலை நாட்டு நடனங்களை ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவர் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அதில் " எனக்கு பாய் ஃபிரண்டா இருக்கனும்னா சிம்பிளா இருக்கனும் ரொம்ப டவுன் டு எர்த்தா இருக்கனும், பிறரிடம் பேசும் பொழுது ரொம்ப மரியாதையோடு பேசனும் . மேனர்ஸ்னா தம்மடிக்க கூடாது, தண்ணி அடிக்க கூடாதுனலாம் இல்லை. எனக்கு அப்படியான ஆட்கள் மீதுதான் ஈர்ப்பு வரும். படையப்பா படத்துல நீலாம்பரி கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும் . அப்படியான வில்லி ரோல் கிடைத்தா பண்ணுவேன். விஜய் சேதுபதி மாஸ்டர் படத்துல பயங்கரமா நடிச்சிருப்பாரே.. சுந்தர பாண்டியன் படத்துல அவர் கூட அவ்வளவா பேசினது இல்லை. ஆனால் நோட் பண்ணியிருக்கேன். ரெக்க படத்துல நடிக்கும் பொழுது பெரிய மாற்றமெல்லாம் இல்லை அவர் எப்போதும் போலதான் இருக்காரு.
View this post on Instagram
வேதாளம் படத்துல அஜித் கூட நடிக்க போகும் பொழுது , அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி என்ன சாப்பாடு பிடிக்கும்னுதான். நான் கேள்வி பட்டிருக்கேன். ஆனால் அவரா கேட்கடா நல்லாருக்கும்னு இருந்தேன் . கேட்ட உடனே எனக்கு பன்னீர் பட்டர் மசாலா, ஃபிஷ் வேணும்னு சொன்னேன். உடனே உங்களுக்காக நான் பண்ணுறேனு சொன்னாரு. அவ்வளவு டேஸ்டா இருந்துச்சு . கேரவன் பின்னாலயே அதுக்கான செட்டப் பண்ணிப்பாருனு கேள்வி பட்டிருக்கேன். ஒருநாள் எல்லோருக்கும் பொங்கல் செஞ்சு கொடுத்தாரு. அடேங்கப்பா பயங்கர டேஸ்ட்.” என ஷேர் செய்திருக்கிறார் லக்ஷ்மி மேனன்.